தங்களுக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டிருக்கும் ரஜினி, கமல் இருவரும் பல வருடங்களாகவே உச்ச நடிகர்கள் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். அடுத்த தலைமுறை நடிகர்கள் ஸ்கோர் செய்தாலும் இவர்களுக்கான இடம் அப்படியே தான் இருக்கிறது. இப்படி புகழுடன் இருக்கும் இவர்கள் ஒரு நடிகரை ஓரங்கட்டினார்கள் என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது.
ஏனென்றால் இவர்கள் இருவருமே சக நடிகர்களுடன் பாராபட்சம் பார்க்காமல் எளிமையாக பழகுபவர்கள். அப்படி இருக்கும் இவர்கள் காமெடியில் தனக்கென ஒரு பாணியுடன் வலம் வந்த கவுண்டமணியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நக்கல், நையாண்டிகளுக்கு பெயர் போன கவுண்டமணியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
Also read: படம் எடுக்குறது ஈசி அதை ரிலீஸ் பண்றது கஷ்டம்.. ரஜினி படத்திற்கே இப்படி ஒரு சோதனையா
இப்போது பல காமெடி நடிகர்கள் கலக்கி கொண்டிருந்தாலும் நகைச்சுவை என்றாலே கவுண்டர் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் தனக்கென பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார். சுப்ரமணி என்ற பெயருடன் இருந்த இவர் தன்னுடைய கவுண்டர் காமெடிகளாலேயே கவுண்டமணி என பெயர் பெற்றார்.
ஆரம்பத்தில் இவர் ஹீரோக்களுக்கு இணையாக அவர்கள் கூடவே ட்ராவல் பண்ணும் படியாக தான் நடித்து வந்தார். இன்னும் சொல்லப்போனால் படம் முழுக்க வரும்படியாகத்தான் இவருடைய கதாபாத்திரம் இருக்கும். அந்த வகையில் ஒரு காமெடியனாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் இவர் கலக்கி இருக்கிறார்.
Also read: கமலிடம் தோற்றுப் போனதை ஏற்றுக் கொள்ளாத ரஜினி.. கொடுத்த அடியால் எழுந்திருக்க முடியாமல் போன உலக நாயகன்
அந்த வகையில் ரஜினி, கமலுடன் இணைந்து இவர் பண்ணாத அலப்பறைகளே கிடையாது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் இவருடன் இணைந்து நடிப்பதை தவிர்க்க ஆரம்பித்தார்கள். மேலும் இருவரும் ஒரு பெரிய அந்தஸ்திற்கு வந்தவுடன் கவுண்டமணி சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை தனியாக எடுத்துக் கொள்ளுமாறு இயக்குனர்களிடம் கூறியிருக்கின்றனர்.
ஏனென்றால் இவர் காமெடி செய்பவர் தானே, எதற்காக நமக்கு சரிசமமாக வர வேண்டும் என்ற ஒரு எண்ணம் தான். அதன் காரணமாகவே இப்படி ஒரு திட்டமும் போடப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் உடன் இணைந்து தனியான காமெடி ட்ராக்கில் கலக்க ஆரம்பித்தார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற ஆரம்பித்தது. அந்த வகையில் ஒரேயடியாக உச்ச நடிகர்களால் ஓரம் கட்டப்பட்டாலும் கவுண்டமணி கெத்துடன் தான் இருந்திருக்கிறார்.