Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தளபதியோட எப்போ ஜாயின் பண்றீங்க.. கோலிவுட்டை அசரவைத்த கமலின் பதில்

தளபதியோட எப்போ ஜாயின் பண்றீங்க.. கோலிவுட்டை அசரவைத்த கமலின் பதில்

பெரிய நடிகர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் ஆரம்பத்தில் ரஜினி, கமல் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இருவரும் பெரிய நடிகர்களான பிறகு தற்போது வரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது […]

பெரிய நடிகர்கள் இருவரையும் ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் ஆரம்பத்தில் ரஜினி, கமல் இணைந்து பல படங்களில் நடித்திருந்தாலும் இருவரும் பெரிய நடிகர்களான பிறகு தற்போது வரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது கமலஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார் கமல். இப்படத்தை மாநகரம் மற்றும் மாஸ்டர் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக கமல் மலேசியா சென்று இருந்தார். அப்போது ஒருவர் விக்ரம் படத்தின் அடுத்த அடுத்த பாகங்களில் தளபதி விஜய் நடிப்பாரா என்ற கேள்வியை கமலிடம் கேட்டுள்ளனர். ஏற்கனவே விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை கமலஹாசன் தயாரிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் படத்தை தயாரிக்க உள்ளதாக கமலஹாசனை கூறியிருந்தார். மேலும் விஜய்யின் கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கண்டிப்பாக விஜய் ரசிகர்களை பெருமளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் தான் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதற்கு அடுத்தபடியாக விஜய் நடிக்கும் படங்களை கமலஹாசன் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் கமலஹாசன் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டிலும் முழுவீச்சாக செயல்பட்டு வருகிறார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.