வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

பிரபலங்கள் என்ற பேச்சு எடுத்தாலே தமிழ் சினிமாவில் நம் நினைவுக்கு வருவது ரஜினி மற்றும் கமல் தான். இந்நிலையில் வம்பை விலை கொடுத்து வாங்குவது போன்று கமல் செய்து வரும் காரியம் தற்பொழுது மிகுந்த வேதனையை உண்டுபடுத்தி வருகிறது.

விக்ரம் பட வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் உலகநாயகன் கமலஹாசன். இதை தொடர்ந்து ஏற்கனவே நிலுவையில் போடப்பட்டிருந்த படமான ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் அப்படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்பதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: முத்தையா, ஆர்யாவின் காம்போவில் வெளிவந்த காதர் பாட்ஷா தேருமா? பரபரப்பை கிளப்பிய ட்விட்டர் விமர்சனம்

மேலும் இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடிக்கின்றார்கள். இப்படத்தில் தெலுங்கு நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக இடம்பெறுகிறார். 500 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்படும் ப்ராஜெக்ட் கே பல எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்திற்கு 20 நாள் கால்ஷீட் கொடுத்துள்ள கமல் இப்படத்திற்காக 150 கோடி சம்பளத்தை கேட்டிருக்கிறார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழிலும், இந்தியிலும் மொழிபெயர்க்கப்படுவதால் இப்படத்தை கமல் ஏன் ஒத்துக் கொண்டார் என்பது கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.

Also Read: தான் யார் என்பதை மறந்து தனுஷுக்கு சோப் போடும் பாரதிராஜா.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா சார்!

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இணையாக நடித்து வரும் இத்தகைய ஜாம்பவான் பிரபாஸ் போன்ற ஜூனியர் நடிகருக்கு வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்தது மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி வருகிறது. தன்னுடன் பயணித்த சக நடிகரான ரஜினிக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள். தற்பொழுது வீண் வம்பை விலைக்கு வாங்கும் விதமாக கமல் எடுத்து வரும் இத்தகைய முடிவை கைவிட்டால் நல்லா இருக்கும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.

Also Read: மொத்த தமிழ் சினிமாவையும் கைக்குள் வைத்திருந்த சேட்.. எம்ஜிஆர், சிவாஜியவே மிரள விட்ட பணக்காரர்

Trending News