வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உலகத்துல இதை விட பெரிய சந்தோசம் வேற இல்லை.! நெகிழ்ந்து போன ஜெய் பீம் மணிகண்டன்

விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும், சில்லு கருப்பட்டி, ஏலே போன்ற படங்களில் இந்த பையன் நல்லா பண்றான் பா..! நல்ல திறமை இருக்கு இந்த பையன் கிட்ட என்று வெகு ஜனங்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்தான் நடிகர் மணிகண்டன்.

இருந்தாலும் அவரது உண்மையான திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய படம் ஜெய் பீம் தான். ஜெய் பீமிற்க்கு பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அப்படி சில தினங்களுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியான சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி நடிப்பில் வெளுத்து வாங்கி இருந்தார்.

இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களை விரும்பி பார்ப்பதோடு மட்டுமில்லாமல் படம் நன்றாக இருந்தால் நிச்சயம் பாராட்டவும் தயங்க மாட்டார் உலக நாயகன் கமல்ஹாசன். அவர் இந்த சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

அப்போது மணிகண்டனை வெகுவாக பாராட்டி பேசி இருக்கிறார். அதனை மணிகண்டன் மிகுந்த நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார். கமல் சார் திரை உலகின் வாத்தியார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி.

manikandan-kamal
manikandan-kamal

கமல் சார், பாராட்டுனதைவிட பெரிய சந்தோஷம் எதுவுமில்ல எனக்கு . கமல் சாரோட தூங்கா வனம், விஸ்வரூபம் படத்துல கூட்டத்துல நிக்குற ஆளா டப்பிங் ஆர்டிஸ்ட் வேலை பார்த்தவனுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் வேற என்ன இருக்கப்போகிறது என்று நெகிழ்ந்து விட்டார்.

Trending News