திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

புத்தம் புது போட்டியாளர்களுடன் களமிறங்கும் ஆண்டவர்.. பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங் எப்போது தெரியுமா?

விஜய் டிவியில் கடந்த ஐந்து சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றியை அடைவதற்கு முக்கிய காரணம் அதை தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசன் தான் என்பது யாராலும் மறுக்க முடியாது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்க இருக்கிறது. இதற்கான ப்ரோமோக்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் இதன் ஒளிபரப்பு தேதி எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விமரிசையாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

Also read:பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது பிக்பாஸ் குழுவினரால் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே போட்டியாளர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தங்குவதற்காக பிரம்மாண்டமான வீடும் தயார் நிலையில் இருக்கிறது.

இதற்கு முந்தைய சீசன்கள் போல் இல்லாமல் இந்த முறை பல சுவாரஸ்யமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட இருக்கிறதாம். மேலும் ரசிகர்களை ஆர்வம் கொள்ள வைக்கும் வகையிலும் பல விஷயங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் விஜய் டிவியின் டிஆர்பியும் எக்கச்சக்கமாக உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read:கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்

அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் 24 மணி நேரமும் லைவ்வாக பார்க்கும் வகையில் அனைத்து விஷயங்களும் பக்காவாக செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நிகழ்ச்சி ஆரம்பித்த பிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு 10:30 மணியில் இருந்து வெள்ளி இரவு 12 மணி வரை ரசிகர்களால் இந்த நிகழ்ச்சியை லைவ்வாக டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் பார்க்க முடியும்.

ஒவ்வொரு சீசனிலும் ஆண்டவரின் ஆட்டம் அதிரடியாக ரசிகர்களை கவரும் அதனாலேயே அவர் வரும் சனி மற்றும் வாழ்த்துக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். தற்போது விக்ரம் திரைப்படத்தின் வெற்றியால் உற்சாகமாக இருக்கும் கமல்ஹாசன் இந்த பிக்பாஸ் சீசனை மேலும் சுவாரசியத்துடன் கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:இணையத்தில் கசிந்த பிக்பாஸ் நடிகையின் பலான வீடியோ.. விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்

Trending News