திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலை வைத்துக்கொண்டே தேவர் மகன் சாதிய படம் என கூறிய மாரி செல்வராஜ்.. வெடிக்கும் சர்ச்சை

Devar Magan Movie Controversy: இப்போது இணையத்தில் சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கும் விஷயம் மாமன்னன் விழாவில் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்து பேசியது தான். அதாவது இப்படத்தில் இடம்பெற்ற இசக்கி கதாபாத்திரத்தை வைத்து தான் மாமன்னன் படத்தை இயக்கியுள்ளதாக கூறியிருந்தார்.

மேலும் தேவர் மகன் படம் சாதிய படம், அதனால்தான் அந்தப் படத்தின் பாடலில் கூட தேவர் காலடி மண்ணே என்ற வரிகள் வந்துள்ளதாக பேசி இருந்தார். இதனால் தான் இசக்கி போன்றவர்கள் தற்போதும் வளர்ச்சி அடையாமல் இருக்கிறார்கள் என சாடி இருந்தார். ஆனால் தேவர் மகன் படத்தில் இசக்கி ஒடுக்கப்பட்டவர் என எங்குமே குறிப்பிடவில்லை.

Also Read : எல்லா படங்களிலும் ஒரே சீனை காப்பியடிக்கும் மாரி செல்வராஜ்.. மாமன்னன் ட்ரைலரால் அம்பலமான சீக்ரெட்

அதுமட்டுமின்றி கடைசியில் கமல் வன்முறை வேண்டாம், எல்லோரும் போய் படியுங்கள் என்று தான் கூறியிருப்பார். ஆனால் மாரி செல்வராஜின் ஆதங்கம் என்பது சரியான ஒன்றுதான். இப்போதும் சாதியை கொடுமைகள் பல இடங்களில் நடந்து தான் வருகிறது. அதை பிரதிபலிக்கும் விதமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காகவும் படங்களை எடுத்து வருகிறார்.

ஆனால் அந்த காலத்தில் வெளியான படங்களில் சாதிய படம் தேவர் மகன் மட்டும்தான் என்று சொல்லி விட முடியாது. மேலும் இந்த சர்ச்சை வெடிக்கும் முன்பே தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்கான விளக்கத்தை ஆண்டவர் அருமையாக கூறியிருக்கிறார். அதாவது மதுப்பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற படம் எடுத்தால் கதையின் நாயகன் குடிகாரனாக இருக்க வேண்டும்.

Also Read : காலங்கள் தாண்டியும் பேசப்படும் கமலின் 5 படங்கள்.. பார்ட் 2-க்காக ஏங்க வைத்த தேவர் மகன்

அதிலிருந்து அவன் எப்படி திருந்துகிறான் என்பதுதான் கதையின் சாராம்சம். அவ்வாறு தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதிலிருந்து ஒருவர் சொன்னால்தான் ஏற்றுக்கொள்ள முடியும். மேலும் இந்த மாற்றங்கள் எல்லாம் உடனடியாக வந்து விடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொண்டு வர முடியும்.

அதுமட்டுமின்றி அந்தப் பாடல் வரிகள் வேண்டுமென்றே எழுதப்பட்டதல்ல. அப்போது இந்த பாடல் வரிகளுக்கு விமர்சனம் எழுந்த போது ஏற்றுக்கொண்டோமே தவிர வாதாடவில்லை. ஆனாலும் தற்போது அந்தப் பாடல் வரிகளை எழுதிய வாலி இல்லையென்றாலும் அவர் சார்பில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை என அழகாக விளக்கம் கொடுத்திருந்தார் கமல்.

Also Read : 90களில் கவர்ச்சிக்காகவே வாய்ப்பை பெற்ற 6 நடிகைகள்.. கமல் சூரசம்ஹாரம் செய்த ஹீரோயின் நிரோஷா

Trending News