திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அஜித் நிஜத்தில் மிகப்பெரிய பிராடு.. என்ன இப்படி சொல்லிட்டாரு? கண்டபடி திட்டிய கமலின் வெற்றி தயாரிப்பாளர்

Actor Ajith: அஜித்தை பற்றி நெருங்கி பழகிய பலரும் அவரைப் பற்றி ஒரு குறை கூட சொல்லியது கிடையாது. இப்படிப்பட்ட மனுஷனை யாராலும் பார்க்க முடியாது என்று ஆகா ஓகோ என புகழ்ந்துதான் பேசியிருக்கிறார்கள். கமலின் வெற்றி தயாரிப்பாளர் ஒருவர் அஜித்தை கண்டபடி பேசி இருக்கிறார்.

அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதாவது விஜய்யின் முதல் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இப்போது கமலின் வேட்டையாடு விளையாடு படத்தின் ரீலீஸ் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 17 வருடங்கள் பின் வெளியானாலும் புது பொலிவுடன் இப்படம் இருக்கிறது.

Also Read : ரஜினி, அஜித் இணைந்து நடிக்கும் படம்.. விஜய்யை காலி செய்ய சூப்பர் ஸ்டார் போட்ட புது பிளான்

இந்த படத்தை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன். இப்போது வேட்டையாடு விளையாடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இவர் நிறைய யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்து வருகிறார். அப்போதுதான் அஜித்தை பற்றி அதிர்ச்சி தரும் விஷயத்தை கூறியிருக்கிறார். அதாவது அஜித் ஒரு நல்ல நடிகன்.

ஏனென்றால் நிஜத்திலும் அவர் நன்றாக நடிக்க கூடியவர். என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். அப்போது என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் நிறைய தயாரிப்பாளர்கள் ஒன்னும் இல்லாமல் போய் உள்ளனர்.

Also Read : ஊரே பத்திகிட்டு எரியுது உங்களுக்கு என்ன கவலை.. வாயை திறக்காத ரஜினி, கமல், விஜய், அஜித்தால் பெரும் சர்ச்சை

அஜித்தால் தயாரிப்பாளர் ரத்தினம் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார். இப்போதுதான் இவர் நன்றாக சம்பாதிக்கிறாரே இரத்தினத்திற்கு 5 கோடி கொடுக்க வேண்டியது தானே. ஆனால் அஜித் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். அதே போல் மகிழ்திருமேனியை வைத்து நான் முன்தினம் பார்த்தேன் என்ற படத்தை எடுத்தேன்.

நல்ல மனுஷன்னு நினைச்சு எடுத்தா பட சுத்தமா சொதப்பி விட்டான். அவன வச்சு நான் படம் தயாரித்தது என்னுடைய தப்பு என எல்லோரையும் பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கி இருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். இப்போது இவர் பேசியதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் ஆவேசம் கொண்டுள்ளனர்.

Also Read : விடாமுயற்சிக்காக திரிஷா இடத்தை தட்டி பிடித்த ஐட்டம் நடிகை.. யாருதான் அஜித்துக்கு ஜோடி

Trending News