திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வெற்றிமாறனின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கமல்.. காலத்தால் அழியாத முக்கியமான படம்

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் உதவி இயக்குனராக பணியாற்றிய வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார். அதன் பிறகு சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் பணியாற்றயுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறனின் வாழ்க்கையையே மாற்றிய படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் படம் தான் என கூறியுள்ளார். கேங்ஸ்டர் கதையில் உருவான நாயகன் படம் தான், நான் சினிமாவில் வருவதற்கு ஊக்குவித்தது என வெற்றிமாறன் கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தை கமலஹாசன் ஏற்று நடித்திருந்தார். தற்போது வரை தமிழ் சினிமாவில் நாயகன் போன்ற இன்னொரு படம் வெளியாகவில்லை என வெற்றிமாறன் கூறியிருந்தார். மேலும் நாயகன் படத்தை கிட்டத்தட்ட 45 தடவைக்கு மேல் வெற்றிமாறன் பார்த்துள்ளாராம்.

இந்நிலையில் கமல் நடித்த பல படங்கள் தற்போது உள்ள நடிகர்களுக்கு உத்வேகமாக உள்ளது. அதேபோல் பல இயக்குனர்கள் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக நாயகன் படம் இருந்துள்ளது. ஆனால் சமீபத்தில் மணிரத்னம் கூறுகையில், நாயகன் படத்தை இப்போது பார்த்தால் கூட சில காட்சிகளை வேறுவிதமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றும்.

அப்படி எடுத்திருந்தால் படம் பெரிய அளவில் பேசப்பட்டு இருக்கும் என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றும் என மணிரத்னம் கூறியுள்ளார். எதுவாக இருந்தாலும் காலத்தால் அழியாத நாயகன் படம் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரட் படமாக உள்ளது.

Trending News