திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அசால்டாக ஒரு கோடி கொடுத்த கமல்.. காசு இல்ல உழைப்பை தரேன் என ஒதுங்கிய ரஜினி

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இன்னும் 40 சதவீத கட்டிட பணிகள் முடிவடைய வேண்டியதால் அதற்கு 30 கோடி நிதி தேவை. இதனால் நிதியைத் திரட்டும் வேலைகளை நடிகர் சங்க நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

அப்போது 60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்தபோது, முதல் சந்திப்பிலேயே நடிகர் சங்க கட்டிட பணிக்காக 1 கோடி ரூபாயை சத்தம் இல்லாமல் வெளியே தெரியாத அளவுக்கு கொடுத்து அனுப்பி உள்ளார்.

Also Read: எனக்கு ஆபத்துன்னா தளபதியாய் வந்து நிற்பார்.. கமலஹாசனை தோளோடு தோளாய் காக்கும் நடிகர்

அதேபோன்று கோலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமும் நடிகர் சங்க கட்டிடம் பணிக்கான நிதியை கேட்டபோது, ‘என்னோட உடல் உழைப்பை வேண்டும் அளவுக்கு தருகிறேன். ஏதாவது ஃபங்ஷன் வைத்தால் வருகிறேன்’ என்று வெறுங்கையுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.

ரஜினி இப்படி நடந்து கொண்டது அந்த குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் கமல் ஒரு கோடி கொடுத்தால் நீங்களும் கொடுக்க வேண்டும் என்று எந்தவித வாக்குவாதமும் செய்யாமல் திரும்பி வந்து விட்டனராம்.

Also Read: சுயம்பு போல் வளர்ந்து சாதித்த இயக்குனர்.. ஆலமரம் போல் தலையில் தூக்கி வைத்து ஆடும் ரஜினி, கமல்

ஆனால் கர்நாடகத்தில் ஏதோ ஒரு மூலையில் கண்டக்டராக இருந்த ரஜினியை தமிழ் ரசிகர்கள்தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி, சூப்பர்ஸ்டார் என புகழும் அளவுக்கு சினிமாவில் அந்தஸ்தை கொடுத்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

அப்படி இருக்கும்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிக்கு அவரால் முடிந்த தொகையை அளிக்காமல் வெறுங்கையுடன் அவர்களை அனுப்பியது பலரால் விமர்சிக்கப்படுகிறது. இதனால் சூப்பர்ஸ்டார் ரசிகர்களும் சங்கடத்தில் உள்ளனர்.

Also Read: இதுவரைக்கும் ரஜினி பேசாத ஒரே மொழி.. இப்ப வரைக்கும் முயற்சி பண்ணல

Trending News