புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியன்-2 படம் பார்த்த பின் ஷங்கருக்கு பல லட்சம் பரிசு கொடுத்த கமல்.. இவ்ளோ காஸ்ட்லி வாட்சா.?

Actor Kamal: பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகனின் நடிப்பில் இந்தியன் 2 பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படம் சில பல தடைகளை கடந்து தற்போது வேகம் எடுத்து இருக்கிறது.

அந்த வகையில் லேட்டானாலும் லேட்டஸ்டாக இருக்கும் வகையில் கெத்து காட்டும் இப்படத்தை பார்த்து தற்போது உலகநாயகன் மெய் சிலிர்த்து போயிருக்கிறார். அந்த மகிழ்ச்சியை தெரிவிக்கும் வகையில் அவர் இயக்குனர் சங்கருக்கு பல லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லியான வாட்சை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

Also read: இதுக்கு லோகேஷ் பரவாயில்ல.. ஷங்கரால் படாத பாடுபடும் இந்தியன் 2 படக்குழு

அந்த போட்டோவை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கமல் ஷங்கரை புகழ்ந்தும் பேசியிருக்கிறார். அதாவது இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். ஷங்கருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.

இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாக கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி என வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

Also read: இந்தியன்-2 ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. விக்ரம் வசூலை முறியடிக்க வரும் ஷங்கர்

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் கமல் ஷங்கருக்கு அளித்த வாட்சின் விலை மட்டுமே 8 லட்சத்தை தாண்டும். அந்த வகையில் அவர் Panerai Luminor என்ற வார்த்தை தான் சங்கருக்கு பரிசளித்திருக்கிறார். ஏற்கனவே ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கும் வாட்சை தான் கமல் பரிசளித்திருந்தார்.

சங்கருக்கு பல லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லியான வாட்சை கொடுத்த கமல்

kamal-shankar
kamal-shankar

அதேபோன்று ஹேராம் படத்தில் நட்புக்காக நடித்துக் கொடுத்த ஷாருக்கானுக்கும் விலை உயர்ந்த வாட்சை தான் அவர் பரிசளித்தார். இதன் மூலம் நேரம் முக்கியம் என்று அவர் அனைவருக்கும் நாசுக்காக கூறுகிறார். அந்த வகையில் கமல் இப்போது ஷங்கருக்கு இவ்வளவு விலை உயர்ந்த பரிசை கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: கமல், கவுண்டமணி காம்போவில் அசத்திய 5 படங்கள்.. வசூலில் ரஜினியை பின்னுக்கு தள்ளிய இந்தியன்

Trending News