புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பஸ் ஓட்டிய ஷர்மிளாவை அசிங்கப்படுத்திய ஓனர்.. ஓலா, உபெர்-க்கு போட்டியாக தொடங்கும் புதிய தொழில்

Kamal Haasan – Driver Sharmila: உலகநாயகன் கமலஹாசன் அரசியலுக்கு வந்த பிறகு சமூக நடப்புகளில் அதிகமான கவனம் செலுத்துவதோடு, அதை எதிர்த்து கேள்விகளையும் எழுப்பி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சனைக்காக கமல் செய்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. கமலால் மட்டுமே இதுபோன்று யோசிக்க முடியும் என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனர் என்று மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கியவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்து ஒன்றை ஓட்டி வந்தார். சமீப காலமாக இவருடைய வீடியோக்களும் பேட்டிகளும் இவரை பயங்கரமாக ட்ரெண்டாக்கினது.

Also Read: ஆதிபுருஷால் ஆண்டவரிடம் தஞ்சமடைந்த பிரபாஸ்.. மாஸ் கூட்டணியில் உருவாகும் ப்ராஜெக்ட் கே

இவரைப் பாராட்டத்தக்க வகையில் திமுக கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இரண்டு தினங்களுக்கு முன்பு இவரை நேரில் சந்தித்து அவருடைய பேருந்தில் பயணித்தார். அதிலிருந்து ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ஷர்மிளாவுக்கு அவருடைய முதலாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விஷயம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இன்று நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் ஷர்மிளாவை சென்னையில் நேரில் சந்தித்திருக்கிறார். சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அவருக்கு கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இந்த காரை வாடகை ஒட்டி, அதன் மூலம் ஷர்மிளா தொழில் முனைவோராக மாற வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு பரிசை கொடுத்திருக்கிறார் உலகநாயகன்.

Also Read: மணிரத்தினம், கமல் காம்போவில் இணைந்த முக்கிய பிரபலம்.. மல்டி ஸ்டார் படமாக உருவாகும் உலகநாயகன் 234

மேலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார் , மகள் ஷர்மிளாவுக்கு வாழ்த்துகள், இவர் தன்னுடைய வாழ்க்கையை ஒரு ஓட்டுனராக முடிக்க வேண்டியவர் இல்லை, அவரைப் போன்று பல ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்று பதிவிட்டு வாழ்த்துகளையும் சொல்லி இருக்கிறார்.

பஸ் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த கமல்

Kamal Sharmila
Kamal Sharmila

பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா வேலை நீக்கத்தின் போது பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு கண்டிப்பாக தமிழக அரசின் சார்பில் அரசாங்க வேலை கொடுக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால் கமலஹாசன் முற்றிலும் வித்தியாசமாக யோசித்து தொழிலாளியாக இருந்த பெண்ணை தற்போது தொழில் முனைவோராக மாற்றி இருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

Also Read: அவர் போட்ட விதை விருட்சமா வளந்து நிக்குது.. இன்று ரிலீசான 7 படங்களை ஓரம்கட்டி கெத்து காட்டிய கமல்

Trending News