வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புகழ்ச்சி எனக்கு வஞ்சம் உனக்கு.. ஆழம் தெரியாமல் காலை விட்ட ஹவுஸ் மேட்ஸ், ரோஸ்ட்டுக்கு தயாரான ஆண்டவர்

Biggboss 7: வார இறுதியானாலே பிக்பாஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும். ஏனென்றால் கமலின் தரிசனம் கிடைப்பது மட்டுமல்லாமல் வாரம் முழுவதும் ஓவர் ஆட்டம் போட்ட நபர்களுக்கு அர்ச்சனையும் கிடைக்கும். அதற்காகவே சனி, ஞாயிறு தினங்களை ஆடியன்ஸ் பெரிதும் எதிர்பார்ப்பது உண்டு.

ஆனால் இந்த சீசன் வார இறுதி ரசிகர்களை முழுமையாக திருப்தி படுத்தவில்லை. அதனாலேயே கமல் பாராபட்சம் காட்டுகிறார் என்ற விமர்சனமும் எழுந்து வந்தது. அதை உணர்ந்து கொண்ட ஆண்டவரும் கடந்த வாரம் வேற லெவலில் சம்பவம் செய்தார்.

அதன்படி ஒவ்வொருவரையும் பதில் பேச முடியாத அளவுக்கு கேள்விகளை கேட்டு நன்றாகவே ரோஸ்ட் செய்தார். அதேபோன்ற சம்பவம் இந்த வாரமும் இருக்கும் என தற்போது வெளிவந்திருக்கும் ப்ரோமோவிலேயே தெரிகிறது. அதில் கமல் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை சூசகமாக கூறுகிறார்.

Also read: கமல் தயாரிப்பில் நடிக்கப் போகும் 3 சீசன் 7 போட்டியாளர்கள்.. வனிதா கனவு வீண் போகல

அதாவது தன்னை பெஸ்ட் என காட்டுவதற்காக மற்றவர்களை தரம் தாழ்த்தி காட்ட நினைப்பதுதான் போட்டியாளர்களின் யுக்தியாக இருக்கிறது. அப்படின்னா வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி ஏதாவது பண்றாங்களா. அதுவும் கிடையாது அதற்கு முயற்சி கூட எடுக்கவில்லை.

வஞ்சம் உனக்கு புகழ்ச்சி எனக்கு என விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம் என ட்விஸ்ட் வைக்கிறார் ஆண்டவர். இதிலிருந்து இந்த வாரம் ஒட்டு மொத்த பேரும் செய்த அலப்பறைகள் ஆண்டவருக்கு பிடிக்கவில்லை என்பது தெரிகிறது.

அதில் விஷ்ணு, அர்ச்சனாவின் சண்டை, மாயா, தினேஷுக்கு ரெட் கார்டு கொடுக்க பிளான் போட்டது கேப்டன் நிக்சனின் ஆளுமை என பல விஷயங்கள் பேசப்பட இருக்கிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட் தரமான சம்பவமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அவ்வளவு டீலிங் பேசியும் பிரயோஜனம் இல்ல.. பிக்பாஸை விட்டு வெளியேறும் 2 வேஸ்ட் பீஸ்

Trending News