புதன்கிழமை, ஜனவரி 15, 2025

3 நாள் ஷூட்டிங்கில் கோடிக்கணக்கில் சுருட்டிய கமல்.. கல்கி படக்குழு ஆண்டவருக்கு செய்த பணத்தாபிஷேகம்

Kalki Kamal: கடந்த இரண்டு ஆண்டுகளாக கமல் மாதிரி ஒரு பிசியான ஆர்டிஸ்ட்டை தமிழ் சினிமாவில் யாரும் பார்த்ததில்லை அந்த அளவிற்கு பிஸியாக நடித்து வருகிறார். 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 மணி நேரம் வேலை செய்கிறாராம். சமீப காலமாக அரசியலை ஓரங்கட்டி விட்டு முழு கவனத்தை சினிமாவில் காட்டி வருகிறார்.

இந்தியன் 2 பட புரமோஷன் ஒரு பக்கம், மணிரத்தினத்தின் தக் லைஃப் பட சூட்டிங் ஒரு புறம், பிரபாஸின் கல்கி 2898AD படத்தில் காட்டும் வில்லன் முகம். அடுத்து நடிக்கவிருக்கும் அன்பறிவு மாஸ்டர்களின் மற்றும் ஒரு படம் என மிக பிசியாக சுற்றி வருகிறார் உலக நாயகன். தற்சமயம் தக்லைப் படப்பிடிப்பில் இருக்கிறார்.

பாண்டிச்சேரி ஏர்போர்ட்டில் தக்கலைப் படத்தின் சண்டை காட்சிகள் எடுத்து வருகின்றனர். அதன் பின்னர் அடுத்த ஸ்கெடியூல் கேரளா செல்கின்றனர். பின்னர் கடைசி கட்டமாக வெளிநாடு செல்கிறது படக்குழு, அதோடு தக்கலைப் படத்திற்கு பூசணிக்காய் உடைக்கிறார்கள். இந்த படம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி படக்குழு ஆண்டவருக்கு செய்த பணத்தாபிஷேகம்

இதனிடையே மூன்று நாட்கள் மட்டும் கல்கி படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டுள்ளார். கல்கி படம் இரண்டு பாகங்களாக வெளி வருகிறது. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து கமலிடம் ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட் போட்டு அதற்குண்டான கால் சீட்டிற்கும், சம்பளத்திற்கும் தெளிவாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கல்கி முதல் பாகத்தில் கமல் வெறும் 19 நிமிடங்கள் மட்டும்தான் படத்தில் தோன்றுகிறார். இந்த படத்தில் அவர் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கிறார். இரண்டாம் பாகத்தில் தான் கமல் அதிக நேரம் படத்தில் வருகிறாராம். இரண்டு பாகத்திற்கும் சேர்த்து தான் கமலுக்கு 150 கோடிகள் சம்பளம்.

இதனிடையே கல்கி முதல் பாகத்தில் நடித்த மூன்று நாட்களுக்கும் கமல் ஒரு பெருந்தொகையை சம்பளமாக வாங்கி இருக்கிறார். ஒரு நாளைக்கு 10 கோடி என மூன்று நாட்களுக்கு 30 கோடி வாங்கியுள்ளார் கமல். அது மட்டுமின்றி முதல் பாகத்தில் தன்னுடைய போர்ஷனை சீக்கிரமாக முடிக்குமாறு பட குழுவினருக்கு கட்டளை போட்டிருக்கிறார். கமல் 15 நாட்கள் மட்டுமே ஃபர்ஸ்ட் பார்ட்டுக்கு கால் சீட் கொடுத்திருக்கிறார்.

Trending News