Actor Kamal-Goundamani: யாருக்கும் பயப்படாது, டைமிங் காமெடி கொடுத்து தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. பிரபல ஹீரோக்களான ரஜினி, கமலுடன் இவர் இணைந்து அசத்திய படங்கள் ஏராளம்.
இவர் இடம்பெறும் படங்கள் என்றாலே அதில் காமெடிகளுக்கு பஞ்சம் இல்லை. இருப்பினும் படத்திற்கு ஹீரோ என்ற எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் இறங்கி கலக்கிய நகைச்சுவை நிறைந்த 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.
Also Read: அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்.. வித்யாசமான கதையில் உருவாகும் 233வது படம்
இந்தியன்: 1996ல் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் இந்தியன். இப்படத்தில் கமல், மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் சுபாஷாக கவுண்டமணி ஆர்டிஓ அலுவலகத்தில் பணிபுரிவார். இந்நிலையில் கமலுடன் இவர் இணைந்து கலக்கிய நகைச்சுவை நல்ல விமர்சனங்களை பெற்று கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. இப்படத்தின் வசூல் ரஜினியின் பாட்ஷா படத்தின் வசூலை முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயதினிலே: 1977ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் 16 வயதினிலே. இப்படத்தில் ரஜினி, ஸ்ரீதேவி, கமல், கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்தில் பரட்டையாக இடம்பெறும் ரஜினியின் கதாபாத்திரத்திற்கு கொளுத்தி போடும் கதாபாத்திரமாக கவுண்டமணி இணைந்து கமலை கலாய்ப்பது போன்று காட்சிகள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கும்.
சிங்காரவேலன்: 1992ல் உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சிங்காரவேலன். இப்படத்தில் கமல், குஷ்பூ, கவுண்டமணி, வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தன் காதலியை தேடும் பணியில் கமலுக்கு உதவி புரியும் கதாபாத்திரத்தில் ட்ரம்ஸ் மணியாக கவுண்டமணி இடம்பெற்று இருப்பார். இவர் கமலை கலாய்த்து மேற்கொண்ட நகைச்சுவை நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கும்.
மகராசன்: 1993ல் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மகராசன். இப்படத்தில் கமல், பானுப்பிரியா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். கமலுடன், கவுண்டமணி- செந்தில் இணைந்து கோழியை வைத்து அசத்திய காமெடி காட்சிகள் இப்படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
Also Read: கமலின் பல நாள் ஈகோ.. ஜெயிலரில் காத்திருக்கும் ரஜினியின் தரமான சம்பவம்
பேர் சொல்லும் பிள்ளை: 1987ல் முத்துராம் இயக்கத்தில் கமலஹாசன், ராதிகா, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அனாதையாய், ராமு கதாபாத்திரத்தில் இடம் பெற்ற கமலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மேலும் கமல் கவுண்டமணியை பார்த்து கருநாகப் பாம்பு என சொல்லும் நகைச்சுவை காட்சியும் கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.