புதன்கிழமை, நவம்பர் 27, 2024

கமலுக்காக கோதாவில் இறங்கிய கருணாநிதி.. ஆண்டவர் செய்த செயலால் பிரமித்துப் போன திரையுலகம்!

கடந்த 2003 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவன் போன்றோர் இணைந்து நடித்த படம் தான் அன்பே சிவம். கமலின் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரம். இரு வேறு காலங்களில் வாழும் இரு வேறு கதாபாத்திரங்களை திரையில் காண்பித்து நடித்து இருப்பார்.

இந்த படம் அந்த சமயத்தில் ரசிகர்களால் புரிந்து கொள்ளவே மிகவும் சிரமமாக இருந்தது. அதுவரை ஹீரோ ஹீரோயின் காதல், வில்லனுடன் சண்டை, ஹீரோ அனைவரையும் அடித்து போட்டு விட்டு ஹீரோயினை காப்பாற்றும் காட்சி என எதுவும் இல்லாமல் ஒரு புத்தகம் படித்த அனுபவத்தை தந்த படம் தான் அன்பே சிவம்.

படத்தில் நடித்த கமல்ஹாசனின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. அதை அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி வெகுவாக பாராட்டியும் இருந்தார். கலைஞர் கருணாநிதியும் திரைதுறையை சேர்ந்தவர் என்பதால் இது போன்ற படைப்புக்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்து பாராட்டுவது வழக்கம்.

ஆனால் இந்த படத்திற்கு ஒரு படி மேலே சென்று, கமலின் இந்த அசுர நடிப்புக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என கண்டன கடிதமே எழுதி சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி விட்டார். அதன் பிறகு தான் தெரிந்தது கமலே இந்த விருதுகள் வேண்டாம் என்று கூறி விட்டார் என்று.

ஆனால், அதே ஆண்டில் இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் படம் வெளியானது. பிணம் எரிக்கும் தொழிலாளியாக நடிப்பில் அச்சு அசலாக தன்னை மாற்றி சிறப்பாக நடித்திருப்பார் நடிகர் விக்ரம். அவருக்கு அந்த ஆண்டு அந்த நடிப்பிற்காக தேசிய விருது வழங்கப்பட்டது.

விருதுகளுக்காக படம் நடிப்பதை விட தமிழ் சினிமாவை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே கமலின் தாகமாக இருக்கிறது என்பதை இந்த சம்பவம் ஊர்ஜிதப்படுத்துகிறது. சும்மாவா சொல்றாங்க அவரை உலக நாயகன் என்று.

- Advertisement -spot_img

Trending News