திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

ட்ரெய்லர் மூலம் சீக்ரெட்டை உடைத்த லோகேஷ்.. விக்ரம் படத்தில் சூர்யா நடித்துள்ள மிரட்டல் காட்சி

உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனிடையே இத்திரைப்படத்தில் பிரபல மாஸ் நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள விக்ரம் திரைப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக், பத்தல பத்தல பாடல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

ட்ரெய்லரில் விஜய் சேதுபதி, பகத் பாசில், கமலஹாசனின் ஆக்சன் காட்சிகளும், ஆணித்தரமான வசனங்களும் இடம் பெற்றிருந்தன. மேலும் நடிகர் சூர்யா வெள்ளை சட்டை அணிந்து புறம் காட்டி நிற்கும் காட்சி ஒன்று இத்திரைப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இதனிடையே விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்தது.

suriya-vikram-movie
suriya-vikram-movie

இதனையடுத்து நேற்று இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேடையில் விக்ரம் படத்தை பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதை சர்ப்ரைசாக வைத்திருந்தோம். ஆனால் எப்படியோ கசிந்துவிட்டது, இதற்கு மேலும் நான் இதை சொல்லாமல் விட்டால் சரியாக இருக்காது. நடிகர் சூர்யா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி உள்ளார்.

மேலும் உலக நாயகன் கமலஹாசனை பார்ப்பதற்காக அவர் வீட்டின் முன் எத்தனையோ நாட்கள் நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போது அவருக்கு ஆக்ஷன் , கட் என்று சொல்லும் அளவிற்கு வருவேன் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்று உணர்ச்சி பொங்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசினார்.

மேலும் இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, சிலம்பரசன், இசைஞானி இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாசன், இசை அமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்று மேடையில் உரையாற்றினர். இந்நிலையில் நடிகர் சூர்யாவும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளதையடுத்து விக்ரம் என்ற கதாபாத்திரம் சூர்யாவாகத்தான் இருக்கும் என்றும் ரசிகர்களும் விமர்சகர்களும் யூகித்து வருகின்றனர்.

Trending News