வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமலஹாசன் கூட நடித்ததற்கு செவுலில் பளார் வாங்கிய நடிகை.. அல்ட்ரா மார்டன் ஆக்டரை வச்சு செய்து உலக நாயகன்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிய ஜாம்பவான் தான் கமலஹாசன். இந்நிலையில் இவருடன் நடித்ததால் செவிலில் பளார் வாங்கிய நடிகை பற்றிய தகவலை இங்கு காண்போம்.

அக்காலக்கட்டத்தில் கமல் நடிப்பில் எண்ணற்ற படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்திருக்கிறது. அவ்வாறு 1978 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் ஸ்ரீதேவி, கமலஹாசன், பாக்யராஜ், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்கள்.

Also Read: ரஜினியை விடாமல் சீண்டி பார்ப்பதே வேலையா போச்சு.. சூப்பர் ஸ்டாரின் இமேஜை பங்கம் பண்ண ப்ளூ சட்டை

இந்நிலையில் இப்படத்தில் வடிவுக்கரசிக்கு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஒரு நாள் பட கம்பெனியிலிருந்து இவரின் அடுத்த படத்திற்கு அழைப்பு பிடித்திருக்கின்றனர். அவ்வாறு வீட்டுக்கு தெரியாமல் நடித்து வந்த இவரின் விஷயம் தெரிய வர, அவரின் அப்பா கண்ணம் பழுக்க செவிலில் அடித்து விட்டாராம்.

இப்படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடித்தார் வடிவுக்கரசி. அப்பொழுது ஒரு சீனில், கமலஹாசன் இவரிடம் சிகரெட் குடிப்பீங்களா என கேட்பது போல காட்சி அமைய பட்டிருந்தது. அதற்கு நான் அடிப்பேன் என கெத்தாய் சிகரெட்டை வாங்கி குடிப்பது போன்ற சீனியில் தன் சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டி இருப்பார்.

Also Read: விஜய் சேதுபதி வைத்தெல்லாம் என்னால் படம் பண்ண முடியாது.. கொந்தளித்த இயக்குனர்

இந்த சீனில் நடித்ததற்கு தான் வீட்டில் அடி வாங்கினாராம் வடிவுக்கரசி. அவ்வாறு தன் சினிமா பயணத்தை மேற்கொண்ட இவர் ஒரு சில படங்களில் மட்டும் ஹீரோயின் கதாபாத்திரம் ஏற்று நடித்த விட்டு, அதன்பின் முழுக்க முழுக்க குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்றதாக கூறப்படுகிறது.

அவ்வாறு தன் முதல் படமே வீட்டுக்கு தெரியாமல் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாய் கலக்கிய வடிவுக்கரசிக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்தே பல படங்களில் கெத்தான வில்லி கதாபாத்திரம் ஏற்று தெறிக்க விட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கதது.

Also Read:  லாஸ்லியாவுக்கும் கவினின் வருங்கால மனைவிக்கும் இப்படி ஒரு தொடர்பா.? சந்தேகத்தை தீர்த்து புகைப்படம்

Trending News