வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்.. விரைவில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட்

உலகநாயகன் கமலஹாசன் தன்னுடைய கனவுப் படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிப்பார். அவ்வப்போது நட்புக்காகவும், கதை பிடித்திருந்தாலும் பிற நடிகர்களின் படங்களையும் தயாரிப்பார். பொதுவாக இவர் தயாரிக்கும் படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறும். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குனர்களையும், நடிகர்களையும் அறிமுகப்படுத்தவும் செய்து இருக்கிறார்.

கடந்த ஆண்டு கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததோடு, வசூல் சாதனையும் படைத்தது. இது கமலுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்ததால், அடுத்தடுத்து தன்னுடைய நிறுவனத்தின் மூலம் படம் பண்ணவும் தயாராகி இருக்கிறார். அடுத்து இவர் நடிகர் சிம்புவை வைத்து படம் பண்ணுகிறார்.

Also Read:வியாபார ரீதியாக முதல் 6 இடத்தை பிடித்த ஹீரோக்கள்.. டல்லடித்த சிவகார்த்திகேயன்

டாடா பட வெற்றிக்கு பிறகு நடிகர் கவினை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் உறுதியளித்திருந்தார். இதற்கு இடையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு பட்ஜெட் படம் கமல் பண்ண இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை புதுவிதமாக காட்ட முயற்சி செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் காமெடி மற்றும் கமர்சியல் என கலக்கிக் கொண்டிருப்பவர். ஆனால் கமலஹாசன் தயாரிப்பில் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கப் போகிறாராம் சிவா. இந்த படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்க இருக்கிறார். சிவாவுக்கு ஆக்சன் ஹீரோ படம் செட் ஆகுமா என்று பார்த்தால் அது மிகப்பெரிய கேள்வி குறிதான்.

Also Read:தோல்வி பட இயக்குனரை தூக்கிவிடும் சிவகார்த்திகேயன்.. மேடையில் உறுதி செய்த கூட்டணி

அவர் ஏற்கனவே காக்கி சட்டை திரைப்படத்தில் ஆக்சன் கதாநாயகனாக முயற்சி செய்து பார்த்தார். ஆனால் அது ரசிகர்களிடையே எடுபடவில்லை. தற்போது கமலுக்காக மீண்டும் அதே முயற்சியில் இறங்க இருக்கிறார். ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்குகிறாராம். இந்த படம் ஒரு திரில்லர் படமாகவும் இருக்குமாம் .

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் சிவாவுக்கு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு கமலஹாசன் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:தோல்வி பயத்தை காட்டும் 2 ஹீரோக்கள்.. என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் !

Trending News