புதன்கிழமை, நவம்பர் 20, 2024

16 வயதினிலே பரட்டையனாக நடிக்க காரணம்.. ரஜினியை விட பல மடங்கு சம்பளம் வாங்கிய கமல்

பாரதிராஜா இயக்கத்தில் 1977இல் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இந்தப் படம் பாக்ஸ் ஆபீசில் 175 நாள் ஓடி வெற்றி பெற்றது. இப்படத்தில் கமல் சப்பானி ஆகவும், ரஜினி பரட்டை ஆகவும், ஸ்ரீதேவி மயிலாகவும் நடித்த இந்த 3 கதாபாத்திரமே மிகவும் பெரிதாக பேசப்பட்டது.

அப்போதைய காலகட்டத்தில் ஹீரோ என்றாலே கலராகவும், பள பளனு முகத்தோடு இருக்க வேண்டும் என ரசிகர்கள் நினைத்தார்கள். பஸ் கண்டக்டராக இருந்து தற்போது சூப்பர் ஸ்டாராக மாறியுள்ள ரஜினிகாந்த் அப்போது ஹீரோக்களுக்கு நேரெதிராக இருந்தார். இதனால் ஆரம்பத்தில் இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் கொடுக்கப்பட்டது.

16 வயதினிலே படத்தில் பாரதிராஜா ரஜினியை தேர்ந்தெடுப்பதற்கான காரணம், வில்லன் கதாபாத்திரத்திற்காக முகபாவனையும், அப்போது ரஜினியின் ஹேர் ஸ்டைலும் கிராமத்து ரவுடியான பரட்டை கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு இருந்தது. இதனால் இந்த கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைத்தார்.

இப்படத்தில் ரஜினியின் இது எப்படி இருக்கு.. என்ற வசனம் அப்போது பட்டி தொட்டி எல்லாம் சென்றடைந்தது. அதேபோல் கவுண்டமணியின் பத்த வச்சுட்டியே பரட்டை என்ற வசனமும் பிரபலமானது. பாரதிராஜா 16 வயதினிலே படத்தை 5 லட்சத்துக்குள் எடுத்து முடித்து விட்டார்.

அப்போது கமலுக்கு 27 ஆயிரமும், ஸ்ரீதேவிக்கு 9 ஆயிரமும் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு ரஜினிகாந்துக்கு 3000 சம்பளம் பேசப்பட்டு கடைசியில் 2500 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 500 ரூபாயை இப்பவரை கொடுக்கவில்லை.

அந்தக் கால கட்டத்தில் ரஜினியை விட கமல் தான் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். இதனால் கமலின் சம்பளத்தைவிட ரஜினிகாந்த் குறைவாக பெற்றார்.
16 வயதினிலே படத்தின் மூலம் முதல் முறையாக ரஜினிகாந்த் வண்ண படத்தில் நடித்தார்.

- Advertisement -spot_img

Trending News