செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

அந்த மனுஷன் இல்லனா இந்த வெற்றி இல்ல.. நண்பனின் இறப்பிற்கு பின் ரூட்டை மாற்றிய கமல்

உலகநாயகன் கமல்ஹாசன் ஆரம்ப கால கட்டத்தில் நடித்தால் ஹீரோ வாகத்தான் நடிப்பேன் என்று இப்போது பல நடிகர்கள் முறுக்கி கொள்வது போல இருப்பவர் அல்ல. எந்த வேடம் என்றாலும் கதைக்கு தேவை என்றால் அசராமல் செய்ய கூடியவர். அதனால் தான் நாம் அவரை 16 வயதினிலே படத்தில் சப்பாணியாகவும், நாயகன் படத்தில் நடக்க முடியாமல் குனிந்து நடக்கும் 60 வயது முதியவராகவும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் அப்பு கமலாகவும் இப்படி பல வித்தியாசமான வேடங்களில் பார்க்க முடிந்தது.

இதேபோல ஒரு படத்தில் நல்ல கன்டென்ட் இருந்தால் போதும் நடிகர் கமல்ஹாசன் அந்த படத்தை ஒப்பு கொள்வார். அந்த வரிசையில் காமெடி செய்வது அவ்வளவு எளிதல்ல என்று அவரே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.

ஆனால் கிரேஷி மோகனோடு அவர் கை கோர்த்து வந்த காமெடி படங்களான அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா என பல படங்களுக்கு கிரேஸி மோகன் எழுதிய காமெடி வசனங்கள் இப்போது எடுத்து பார்த்தால் கூட சலிப்பு தட்டாமல் பார்க்க முடியும். அந்த அளவிற்கு காமெடி தெறிக்கும் படங்களாக இவை இன்றளவும் இருக்கிறது.

திரைத்துறையைத் தாண்டி, கமலும் கிரேஷி மோகனும் நல்ல நண்பர்கள். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி கிரேஸி மோகன் உயிரிழந்தபோது ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒரு நல்ல கலைஞனை இழந்து சோகத்தில் மூழ்கியது. ஒரு பெரிய மாஸ் ஹீரோ காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மக் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் என முழு நீள காமெடி படங்கள் நடித்து ஹிட் கொடுத்து நல்ல வசூல் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் கிரேஷி மோகன்.

கமலின் மன்மதன் அன்பு படம் வரை கமலுடன் இணைந்து பணியாற்றிய கிரேஷி மோகன் மறைந்த பிறகு அதிகமாக துக்கத்தில் உடைந்து போனது கமலாகத்தான் இருக்கும். அதன் பின் ஏனோ கமல் முழுநீள காமெடி படம் என்ற பாதைக்குச் செல்லவே இல்லை. கிரேஷி மோகனின் இழப்புதான் இதற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

கிரேஷி மோகன் போல காமெடி வசனம் எழுத இனி யாரும் கிடையாது என முடிவு செய்து அந்த முயற்சியை உலக நாயகன் கையில் எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அதேபோல, தற்போது கமலின் வியாபார அந்தஸ்து தமிழ் சினிமாவில் எங்கேயோ உள்ளது. மீண்டும் அவர் காமெடி என்று ட்ராக் மாறினால் சரியாக வருமா என்றும் கமல் தயங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

இருந்தாலும் விடாமுயற்சியோடு போராடி வெற்றி காணும் பழக்கம் உடையவர் கமல். அதுமட்டுமில்லாமல் எதிர்பாராத நேரத்தில் எவரும் செய்யாத புதிய முயற்சியை செய்து நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கலைஞன். மீண்டும் காமெடியில் கலக்க முயற்சிகளை எடுத்தாலும் எடுப்பார். எது எப்படியோ அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம் போல ரசிகர்கள் கொண்டாடும் ஒரு காமெடி படம் வந்தால் போதும். கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் உள்ளது.

- Advertisement -spot_img

Trending News