சனிக்கிழமை, நவம்பர் 30, 2024

குணா படம் பிளாப் ஆக இது தான் காரணமாம்.. உண்மையை கூறும் சந்தானபாரதி.

ஒரு படத்தின் வெற்றியையும் தோல்வியையும் யாராலும் முன்னரே கணிக்க முடியாது. வெளியாகும் காலத்தில் வெற்றி அடையாமல், பின்னர் வரும் காலத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாக மாறிய படங்கள் பல உள்ளன. இதற்கு நாம் யாரையும் குறை சொல்லவும் முடியாது.

அப்படி ஒரு படம் தான் திரு.சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான குணா திரைப்படம். ஒரு மன வளர்ச்சி இல்லாத வாலிபன் அழகான ஒரு பெண் மீது காதல் வயப்பட்டு, அவளுக்கு தன் மீது காதல் வர செய்யும் செயல்களே குணா படத்தின் கதைக்களம்.

இப்படியான ஒரு புது கதைக்களத்தில், கமலின் பிரமிப்புமூட்டும் நடிப்பில் 1991ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வந்த திரைப்படம், அப்போதுள்ள ரசிகர்களை பெரிதும் ஈர்க்கவில்லை. இதனால் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.

தோல்வி படம் என்றாலும், அந்த படத்தை தற்போதும் மக்கள் நினைவில் கொள்ளும் விஷயங்கள் பல இடம்பெற்றன. கண்மணி அன்போட காதலன் என்ற பாடல் இன்றளவும் காதலர்கள் மத்தியில் பிரபலம். அதே போல கமல் கூறும் அபிராமி அபிராமி என்னும் டயலாக் தற்போதும் மிக பிரபலம். அந்த படத்தில் இடம் பெரும் குகைகள் அப்போது டெவில்ஸ் கிச்சன் என பெயர் உடையதாக இருந்து படத்தின் தாக்கத்தால் பின்னர் குணா கேவ்ஸ் என பெயர் மாற்றம் அடைந்தது.

அந்த ஆண்டிற்கான சிறந்த 3ஆவது படம் எனும் தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்டும், அந்த படத்தில் நடித்ததற்கு கமலிற்கு பிலிம் ஃ பேர் அவார்டும் கிடைத்தது. இந்த படத்தின் தழுவலாகவே தனுஷ் காதல் கொண்டேன், பார்த்திபன் நடிப்பில் குடைக்குள் மழை போன்ற படங்கள் வெளிவந்தன.

தளபதி படமும் அதே தீபாவளிக்கு வெளியானது குணா படத்திற்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. அப்போது இருந்த ரசிகர்கள் பெரும்பாலும் கமர்சியல் படங்களையே விரும்பியதால் தளபதி படம் வெற்றி அடையவும், குணா தோல்வி அடையவும் மற்றொரு காரணம். நிறைய கமல் படங்கள் இவ்வாறு வணிக ரீதியாக வெற்றி பெறாமல் பின்நாளில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News