Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் முதல்முறையாக பார்ட் 2 படத்தை உருவாக்கியவர் இவர்தான்.. ஆனா அதுல ஒரு கொடுமை இருக்கு

தமிழ் சினிமாவில் முதல்முறையாக பார்ட் 2 படத்தை உருவாக்கியவர் இவர்தான்.. ஆனா அதுல ஒரு கொடுமை இருக்கு

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் இரண்டாம் பாகம் எடுக்க படுகிறது. அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் சிங்கம் 2, […]

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் இரண்டாம் பாகம் எடுக்க படுகிறது. அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெற்றது.

அதேபோல் பாகுபலி படமும் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. அதேபோல் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பார்ட் 2 படங்களை கொண்டு வந்தவர் யார் தெரியுமா.

தற்போது இரண்டாம் பாகம் படங்கள் உருவாக அடிக்கல் நாட்டியவர் உலகநாயகன் கமலஹாசன் தான். கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். தன்னுடைய சிறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் இருந்து தொடங்கி தற்போது வரை பல சாதனைகள் புரிந்துள்ளார்.

முதல் முறையாக இந்தியன் படத்தில் கமல் முதியவராக தெரிவதற்காக பிராஸ்தடிக் மேக்கப் என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். இதேபோல் ஆளவந்தான் படத்திலேயும் முதன்முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமராவை பயன்படுத்தினார். இதேபோல் எண்ணிலடங்கா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

மாறுபட்ட கதாபாத்திரங்கள், பல வேடங்களில் நடிப்பது, உடலை வருத்திக்கொண்டு நடிப்பது என சினிமாவிற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். 1979இல் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் கல்யாணராமன். இப்படத்தை ஜிஎன் ரங்கநாதன் இயக்கியிருந்தார்.

இந்தப்படத்தில் கமல், கல்யாணம் மற்றும் ராமன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியை 1984 இல் ஜப்பானில் கல்யாணராமன் என்று எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதுவே தமிழ் சினிமாவில் முதல்முறையாக வந்த பார்ட் 2 படமாகும். இப்படத்திற்குப் பிறகுதான் பல பார்ட் 2 படங்கள் வெளியானது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.