வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்

உலக நாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் கடவுள் என்றே சொல்லலாம். அதனால் தான் அவரை ரசிகர்கள் ஆண்டவர் என்று அன்போடு அழைக்கின்றனர். சினிமாவுக்காகவே தன்னை அர்பணித்து இருக்கிறார் என்றே சொல்லலாம். இவர் சமீபத்தில் செய்த ஒரு விஷயம் சினிமாவின் மீது இவர் எவ்வளவு காதல் கொண்டிருக்கிறார் என்பதை காட்டியதோடு, நடிகர் விஜய் சேதுபதி மீது இவருக்கு இருக்கும் அன்பையும், மரியாதையையும் காட்டியிருக்கிறது.

இந்தியன் 2 மற்றும் பிக்பாஸ் சீசன் 6 என படு பிசியாக படப்பிடிப்பில் இருந்த கமலஹாசன் சமீபத்தில் ஹைதராபாத் சென்று இருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் இயக்குனர் விஸ்வநாதனையும் சந்தித்தார். பின்னர் சென்னை திரும்பிய கமல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உடனடியாக போரூர் ராமச்சந்திராவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Also Read: எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கமல் சில நாட்கள் ஓய்வெடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதியின் ‘DSP’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தார். கமல் உடல்நிலையும் பொருட்படுத்தாது விஜய் சேதுபதிக்காக அந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

கமலஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பில் இப்போது கலந்து கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கான அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது இதற்காக செட்டும் போடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் வரும் மார்ச் 2023 ல் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியன் 2 அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது தீபாவளியன்று ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறது.

Also Read: வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி

இதற்கிடையில் கமல் அடுத்தடுத்து இயக்குனர்கள் ஹெச் வினோத் மற்றும் மற்றும் மணிரத்தினத்துடன் பணியாற்ற இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலஹாசனும், மணிரத்தினமும் இணைய இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்க இருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கு பிறகு மணிரத்தினம் இயக்க போகும் படம் இது.

இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்த கையோடு, கமலஹாசன் இயக்குனர் ஹெச். வினோத்துக்கு கால்ஷீட் கொடுக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதியும் இணைய வாய்ப்பிருக்கிறது. இந்த படம் குறுகிய காலகட்டத்திற்குள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடத்திற்கு கமலஹாசனுக்கு அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி கொண்டிருக்கின்றன.

Also Read: அக்கட தேசத்து விஜய் சேதுபதி இவர்தான்.. கமலே கூப்பிட்டு பாராட்டிய ஹீரோ

Trending News