ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

உலகநாயகன் சொன்னதற்கு நக்கலாக சிரித்த சிவாஜி.. இப்ப அதைத்தான் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க

1992 ஆம் ஆண்டு இயக்குனர் பரதன் இயக்கத்தில், தமிழில் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற திரைப்படம் தான் தேவர்மகன். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமலஹாசன், வடிவேலு, நாசர், கௌதமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். தேவர்மகன் திரைப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் திரைக்கதையையும் கமலஹாசன் எழுதியிருப்பார்.

இப்படத்தில் சிவாஜிக்கு மகனாக நடித்த கமலஹாசன் உண்மையான சிவாஜியின் மகனாகவே இத்திரைப்படத்தில் நடித்திருப்பார் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, தந்தை சொல்லை தட்டாத மகனாகவும், தந்தைக்காக தனது கனவுகளை துறந்த மகனாகவும் கமலஹாசன் நடித்திருப்பார்.

Also read: எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

பட்டணத்தில் படித்து கிராமத்திற்கு வந்த கமலஹாசன், சிவாஜியிடம் தனது சுதந்திரமான பேச்சை எடுத்து வைக்கும் போதெல்லாம், சிவாஜி அதற்கேற்றார்போல தனது அனுபவம் மிகுந்த வசனங்களை இத்திரைப்படத்தில் ஒரு தந்தையாக கமலஹாசனிடம் சொல்லுவார். அப்படி ஒரு காட்சியில் சிவாஜி கணேசனும் உலக நாயகனும் உணவருந்திக் கொண்டிருப்பர்.

அப்போது தான் ஒரு பிசினஸ் செய்யப்போவதாக கமலஹாசன் சிவாஜி கணேசனிடம் கூற, அதற்கு என்ன பிசினஸ் என சிவாஜி கேட்பார். உடனே பதிலளித்த கமலஹாசன், வெளிநாடுகளில் உள்ள உணவு கடைகளை போல் இங்கும் தான் திறக்க உள்ளதாக தெரிவித்தார். அந்த உணவுகளின் பெயர்களாக மெக்டொனால்ட்ஸ் உள்ளிட்ட பிரபலமான உணவு பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

Also read: பிக் பாஸ் 6 தொகுத்து வழங்க கமல்ஹாசன் கேட்ட சம்பளம்.. கோடியில் புரளும் உலகநாயகன்

அதைக்கேட்ட சிவாஜி யார் வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவார்கள், வீட்டில் சமைத்து சாப்பிடுவது தானே நமது பாரம்பரியம் என நக்கலாக கமலஹாசன் சொன்னதற்கு சிவாஜி கணேசன் சிரிப்பார். இந்த வசனம் அன்றைய காலகட்டத்தில் சிவாஜியை போற்றிய காலகட்டமாக அமைந்தது. ஆனால் தற்போது ஒரு தெருவிற்கு பத்து உணவு கடைகளாவது உள்ளது.

இது பத்தாது என ஆன்லைன் உணவு டெலிவரி என நமது மக்களின் சோம்பேறித்தனத்தை பயன்படுத்தி பல கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பாதித்து வருகின்றன. இதனிடையே அன்றே இப்படி ஒரு நிலை நமக்கு வரும் என கமலஹாசன் கணித்து அத்திரைப்படத்தில் வசனங்களை எழுதி உள்ளார் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Also read: ரஜினி, விஜய்யை சம்பளத்தில் ஓரங்கட்டிய கமல்ஹாசன்.. ஒரே வெற்றி எங்கேயோ போயிட்டாரு

Trending News