வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கொடூர வில்லனாக கலக்கிய கமல்ஹாசன் படங்கள்.. மோசமான கெட்டவனா நடிச்சிருக்காரே

கமலஹாசனை பல வேடங்களில் நாம் பார்த்திருந்தாலும், வில்லன் கதாபாத்திரத்தில் வெற்றி பெற்ற படங்களின் வரிசையை தற்போது பார்க்கலாம். சினிமாவில் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகன் கமலஹாசனை தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.

பல திறமைகளைக் கொண்ட கமலஹாசன் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். தற்போது இந்தியன்-2 மற்றும் தலைவன் இருக்கிறான் போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். கமலஹாசன் நடிப்பில் வில்லன் கதாபாத்திரத்தில் வெளிவந்து படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.

குமாஸ்தாவின் மகள்: நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார், ஆரத்தி, கமலஹாசன், உஷா சகிலா, நாகேஷ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1974 ல் வந்த படம் குமாஸ்தாவின் மகள். இந்த படத்தில் கமலஹாசன் மிரட்டும் வில்லனாக நடித்து இருப்பார். மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. கமலஹாசன் அப்பாவியான குமாஸ்தாவின் மகளை திருமணம் செய்து கொள்கிறார், கமலஹாசன் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார் இப்படிதான் படத்தின் கதை நகரும்.

முழு படம் பார்க்க: குமாஸ்தாவின் மகள்

இந்திரன் சந்திரன்: இசைஞானி இளையராஜாவின் இசையில் 1989 இல் வெளிவந்த படம் இந்திரன் சந்திரன். இந்த  படத்தில் கமலஹாசன், விஜயசாந்தி, சரண்ராஜ் நாகேஷ் போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். கமலஹாசன் இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பார், காமெடி மற்றும் டிராமா கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம்.

முழு படம் பார்க்க: இந்திரன் சந்திரன்

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2001 இல் வெளிவந்த படம் ஆளவந்தான். இப்படத்திற்கு கமலஹாசனை திரைக்கதை அமைத்திருப்பார், இந்த படத்திற்காக முரட்டுத்தனமான உடலை வைத்து வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் கமல். கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது, கமர்சியல் ரீதியாக தோல்வி அடைந்துவிட்டாலும், கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தசாவதாரம்: கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், அசின் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2008-ல் வெளிவந்த படம் தசாவதாரம். சயின்ஸ் ஃபிக்ஸன் கலந்த இந்த படத்தின் கடைசி காட்சியில் சுனாமியை உருவாக்கியிருப்பார்கள், அதை பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையில் 200 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

கமலஹாசன் இந்த படத்தில் பத்து கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். ஆராய்ச்சியாளர்கள் பயோ-வெப்பன் ஒன்றை கண்டுபிடித்து அதை திருடுவதற்காக கமல் வில்லன் தீவிரவாதியாக ஊடுருவி இருப்பார். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஹாலிவுட் அளவிற்கு பேசப்பட்ட படம்.

Trending News