வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மலையாள நடிகருடன் இணையும் கமல்ஹாசன்.. மீண்டும் மாஸ் கூட்டணியில் உருவாக உள்ள படம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வேற லெவலில் ஹிட் ஆனது. இதைத்தொடர்ந்து கமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படபிடிப்பில் பிஸியாக உள்ளார். இதைத்தொடர்ந்து மணிரத்தினம் இயக்கும் படத்தில் கமல் நடிக்க இருகிறார். அதன் பிறகு விக்ரம் படத்தில் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது. மேலும் இளம் இயக்குனர்களிடம் கமல்ஹாசன் கதை கேட்டு வருகிறாராம்.

Also Read : மேடையில் நடந்த அவமானத்தை உடைத்தெறிந்த 40 கதை அஸ்வின்.. செம்பி படம் பார்த்து கமல் கூறிய விமர்சனம்

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளாராம். அதாவது மலையாளத்தில் டாப் ஸ்டாரான மம்முட்டியுடன் ஒரு தடவை கூட கமல் நடித்ததில்லை. ஆனால் மோகன்லாலுடன் இணைந்து உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் நடித்துள்ளார்.

இப்போது இதே கூட்டணியில் தான் மீண்டும் ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் லியோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் படம் மலைக்கோட்டை வாலிபன். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

Also Read : சூப்பர்ஹிட்டான 20 படங்கள்.. நண்பன் மறைவுக்குப்பின் அந்த மாதிரி படங்களில் நடிக்க வெறுத்த கமல்

இந்நிலையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் கமல் நடிக்க இருப்பதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மோகன்லால் மற்றும் கமல் இடையே நீண்ட கால நட்பு தொடர்ந்து வருகிறது. ஆகையால் இந்த படத்தின் மூலம் மீண்டும் இவர்கள் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இணைய உள்ளனர்.

எனவே மீண்டும் இந்த மாஸ் கூட்டணி இணைந்துள்ளதால் படம் கண்டிப்பாக ஹிட் என்று பேசப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த வயதிலும் கமல் இடைவெளி இல்லாமல் இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் படு பிஸியாக ஓடிக்கொண்டு இருக்கிறார்.

Also Read : ரஜினி-கமல் காம்போவில் வந்த 16 படங்களின் மொத்த லிஸ்ட்.. எல்லா மொழியிலும் கலக்கிய ஜாம்பவான்கள்

Trending News