இறங்கி அடிக்கும் கமல்ஹாசன்.. வரிசை கட்டி நிற்கும் படங்கள்

வாரி வழங்கும் வள்ளலாக இல்லாமல் ஒரு நல்ல மனிதனாக வாழ விரும்புகிறேன் என உலக நாயகன் கமலஹாசன் நெகிழ்ச்சியுடன் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்த விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

அனிருத் இசையில் திரையரங்கையே தெறிக்கவிட்ட இத்திரைப்படம் தற்போது வரை 300 கோடியை வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமலஹாசன் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் சர்ப்ரைசாக பரிசுகளை வழங்கினார்.

இதனிடையே விக்ரம் படத்தை பற்றி பேசிய கமலஹாசன், தன்னால் 300 கோடி வரை படத்தில் நடித்து சம்பாதிக்க முடியாது என பலரும் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது 300 கோடியை சம்பாதித்து எனது கடன்களை எல்லாம் அடைக்கும் அளவுக்கு என்னிடம் தற்போது பணம் உள்ளது. மேலும் வயிறார நிம்மதியாக சாப்பிட்டு எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்

மேலும் உதவி செய்ய முடியவில்லை என்றால் செய்ய முடியாது என நேரடியாகவே சொல்லிவிடுவேன். நான் வள்ளலாக இருப்பதை விட, ஒரு நல்ல மனிதனாக இருப்பதையே விரும்புகிறேன். என்னை நடிக்க விடுங்கள் என்று கமலஹாசன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிப்பதற்கு, கமலஹாசன் தற்போது ஆயத்தமாகி வருகிறார்.

இதனிடையே தான் உருவாக்கிய மக்கள் நீதி மையம் கட்சிபணியை தற்சமயம் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை கையில் பிடித்துக் கொண்டு, அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த போவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தேவர்மகன்-2, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் பெயரிடப்படாத திரைப்படம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமல்ஹாசன் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →