புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கமலுக்கு உயிர் பயத்தை காட்டிய ரஜினி.. மனநோய் முத்தியவன் கூட மூணு நாள்கத்தி சண்டை போட முடியாது

Rajinikanth – Kamal Haasan: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றுவரை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது. ரஜினி இந்த வயதிலும் முன்னணி ஹீரோக்களுக்கு போட்டியாக இருந்து வருகிறார். ஆனால் அவருடைய தொடக்க காலத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் ரொம்பவே அதிகம்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் தான் உலகநாயகன் கமலஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும். இவர்கள் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள் என்றாலும் இன்று வரை தங்களுக்குள் இருக்கும் நட்பை வளர்த்து வருகின்றனர். ஆனால் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் கமல், ரஜினிக்கு எதிராக செய்த சூழ்ச்சியான விஷயமும் இருக்கிறது.

Also Read:525 கோடியை தாண்டிய ஜெயிலர் வசூல்.. கேக் வெட்டி மகிழ்ச்சியை கொண்டாடிய முத்துவேல் பாண்டியனின் புகைப்படம்

16 வயதினிலே திரைப்படத்திற்கு பிறகு ரஜினிக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. கடந்த 1978 ஆம் ஆண்டு மட்டும் அவர் ஒரே வருடத்தில் 14 படங்கள் நடித்திருக்கிறார். ஒரு நாளைக்கு ஐந்து படத்திற்கு கால்ஷீட் கொடுக்கும் அளவில் ரஜினி நடித்து வந்ததால் அவருக்கு மனதளவில் உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்கிறோம் என்பது தெரியாத அளவுக்கு இருந்தார். அப்போது ரஜினிக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று மீடியாக்கள் செய்திகள் கூட வெளியிட ஆரம்பித்தன.

ரஜினி எங்கு சென்றாலும் பிரச்சனை செய்வது, சண்டை போடுவது, மற்றவர்களை தாக்குவது என அடுத்தடுத்து அவரைப் பற்றி நிறைய செய்திகள் வெளியாகின. இதனால் அவருடன் நடிப்பதற்கு பல நடிகைகளும் பயப்பட ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் தான் ரஜினி விமான நிலையத்தில் பிரச்சனை செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது கூட.

Also Read:முதல் நாள் முதல் ஷோவில் மண்ணை கவ்விய ரஜினி, கமலின் படங்கள்.. ஹைஃபை ஏற்றி படுதோல்வியான சம்பவம்

ரஜினிக்கு இந்த பிரச்சனை இருக்கும் சமயத்தில் தான் அவரும், கமலும் சேர்ந்து அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் படத்தில் நடித்தனர். இந்த படத்தில் ஒரு வாள் சண்டை காட்சி மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் ரஜினி இருக்கும் மனநிலையில் வாள் சண்டையை மூன்று நாள் படமாக்க திட்டமிடுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயம், ஒரு வேளை அவர் உண்மையாகவே தன்னை தாக்கக்கூடும் என கமல் நினைத்திருக்கிறார்.

இதனால் படத்தின் சண்டை பயிற்சி இயக்குனருடன் தனிப்பட்ட முறையில் பேசி, ரஜினி இருக்கும் இந்த நிலையில் அவருடன் மூன்று நாள் வாள் சண்டை போடுவது என்பது தேவையில்லாத ரிஸ்க் எனவும் இதை ஒரே நாளில் முடித்துக் கொடுக்குமாறும் கேட்டிருக்கிறார். அதே மாதிரி அந்த காட்சியும் ஒரே நாளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. என்னதான் நல்ல நண்பனாக இருந்தாலும் உயிர் பயம் வந்ததால் கமல் இப்படி செய்திருக்கிறார்.

Also Read:உலக நாயகனை விட ஒரு படி கீழ் தான் சூப்பர் ஸ்டார்.. கமல் செய்ததை இன்று வரை செய்ய தவறிய ரஜினி

Trending News