வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தமிழர்களுக்கு தெரியாத மாவீரன்.. மருதநாயகத்திற்காக வாழ்நாள் ரிஸ்க் எடுத்த கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுக்கும் வெகு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் கமல்ஹாசன். சொல்லப்போனால் இவர் அளவுக்கு ரிஸ்க் எடுத்து நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இன்னும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இவர் தான் விரும்பிய ஒரு கதாபாத்திரத்திற்காக உயிரையே பணையம் வைத்து நடித்தது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

பல வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசனின் கனவு திரைப்படமான மருதநாயகம் சில பிரச்சனைகளின் காரணமாக வெளிவராமல் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் ஒட்டு மொத்த திரையுலகையும் எதிர்பார்க்க வைத்த இந்த திரைப்படம் எப்படியாவது மீண்டும் தொடங்கப்படாதா என்பதுதான் ரசிகர்கள் பலரின் ஏக்கமாக இருக்கிறது.

Also read : திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 4 திரைப்படங்கள்.. வருட கணக்கில் காக்க வைக்கும் மருதநாயகம்

அந்த வகையில் மருதநாயகம் பிள்ளை என்ற மாபெரும் வீரனை பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்காது. 1725 காலகட்டத்தில் பிறந்த இந்த மனிதன் தான் சுதந்திரப் போராட்டத்தை ஆரம்பித்த முதல் வீரராவார். ஆங்கிலேயர்களையே குலை நடுங்க வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. ஒரு தமிழனாகவும் தெக்கத்தியனாகவும் எனக்கு ஒரு திமிர் இருக்கிறது என்று கமல் பலமுறை மருதநாயகம் பற்றி கூறியிருக்கிறார்.

அதனாலேயே அவர் இந்த மாபெரும் வரலாற்றை எடுக்க முன் வந்தார். அதிலும் இந்த படத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க் கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த வகையில் இந்த மருதநாயகத்தின் ட்ரெய்லரில் பலரையும் ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த ஒரு விஷயம் கமல் எருமை மாட்டின் மீது சவாரி செய்தபடி ஆக்ரோஷமாக வரும் அந்த காட்சி தான். இது எப்படி சாத்தியமாக முடியும் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

Also read : மீண்டும் தூசி தட்டப்படுமா மருதநாயகம்.. வெளிப்படையாக கூறிய கமல்ஹாசன்

ஏனென்றால் தற்போது வெளியான பொன்னியின் செல்வனில் குதிரை பயிற்சி பெற்றதைப் பற்றி நடிகர்கள் ரொம்பவும் சிலாகித்து பேசி இருந்தனர். அந்த அளவுக்கு குதிரை மீது சவாரி செய்வது ரொம்பவும் கஷ்டம். ஆனால் அதில் அமர்வதற்கு, விழுந்து விடாமல் பிடித்துக் கொள்வதற்கு என்று சில வசதிகள் இருக்கின்றது. அதற்கான பயிற்சிகளும் உண்டு. ஆனால் இந்த எருமை சவாரியில் பயணம் செய்வது அப்படி கிடையாது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான்.

இது குறித்து கமலிடம் பலரும் கூறியிருக்கின்றனர். மேலும் உங்களால் இதை செய்ய முடியாது என்றும் கூறியிருக்கின்றனர். இதுவே கமலுக்கு ஒரு வைராக்கியத்தை கொடுத்தது. அதனாலேயே அவர் துணிந்து தன் உயிரை பணயம் வைத்து அப்படி ஒரு ரிஸ்கை எடுத்தார். ஆனால் பலரும் வியந்து போகும் அளவுக்கு அவர் எடுத்த முயற்சி அவருக்கு கை கொடுத்தது.

தற்போது அந்த காட்சிதான் இன்றைய தலைமுறையை ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கலைஞன் இனிமேல் வருவாரா என்பதே சந்தேகம்தான். அதனால் தான் இவர் உலகநாயகன் என்று போற்றப்படுகிறார்.

Also read : உலக சினிமா பார்வையில் கமல்ஹாசனின் மருதநாயகம்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Trending News