ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

இந்திய சினிமாவை மிரள வைத்த கமல்ஹாசனின் 6 படங்கள்.. இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த விக்ரம்

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமான கமல் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் தமிழ் சினிமாவையே மிரள வைத்த கமலின் 6 படங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியன் : தமிழ் சினிமாவில் இரண்டு மாபெரும் ஆளுமைகளான கமல், ஷங்கர் கூட்டணியில் வெளியான படம் இந்தியன். இந்தப் படத்தில் கமல் 42 வயதில் 70 வயது முதியவர் போல காட்சி அளிக்க மிகவும் மெனக்கெட்டு இருந்தார். சேனாதிபதியாக நடித்தது கமல் என்றால் அப்போது அது பலருக்கும் வியப்பாக இருந்தது. இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

Also Read : 65 ஆண்டுகளாக கமல் சம்பாதித்த மொத்த சொத்து.. லண்டனில் வீடு, சொகுசு காரு என மறைக்கப்பட்ட லிஸ்ட்

அவ்வை சண்முகி : கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் அவ்வை சண்முகி. நம்ம கமலா இது என ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு அவ்வை சண்முகி மாமியாக அசத்தியிருந்தார். இந்தப் படத்தில் கமல் பெண் வேடமிட கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகுமாம். அதற்கான பலனை கமல் இப்படத்தின் வெற்றியின் மூலம் அடைந்தார்.

ஆளவந்தான் : சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் கடவுள் பாதி, மிருகம் பாதி என ரணகளமாக வெளியான படம் ஆளவந்தான். இப்படத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக மோஷன் கிராபிக்ஸ் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்த படம் கமல் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தில் உடல் எடையை ஏற்றி மொட்டை அடித்து கமல் நடிப்பில் மிரட்டி இருந்தார்.

Also Read : டாஸ்கில் அலட்சியம், விதி மீறல்.. இன்றைய பிக்பாஸில் கொதித்துப்போய் எச்சரித்த கமல்

தசாவதாரம் : கமல் பத்து வேடங்களில் நடித்து அசத்திய படம் தசாவதாரம். இப்படம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி 21 ஆம் நூற்றாண்டில் முடியும் மெகா கதையாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் வெற்றிக்கு தொழில் நுட்பம் மிகவும் உதவியாக இருந்தது. கமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ரசிகர்களை மிரள வைத்திருந்தார்.

விஸ்வரூபம் : ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வெளியானது கமலின் விஸ்வரூபம் படம். இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஏகப்பட்ட தடை. அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து விஸ்வரூபம் படம் வெளியாகி உலகையே மிரள வைத்திருந்தது. மேலும் இப்படத்தில் கமலின் நடிப்பு அபாரமாக இருந்தது.

விக்ரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் விக்ரம். இப்படத்தில் கமல் தனது வயதுக்குரிய கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து இருந்தாலும் பழைய எனர்ஜியுடன் மிகவும் உத்வேகமாக நடித்திருந்தார். மேலும் கமலின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை விக்ரம் படம் பெற்றது.

Also Read : அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் ரஜினி, கமல் படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்

Trending News