வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித் மீது அடங்காத பொறாமையில் உலகநாயகன்.. கமலை மிரட்டிய அந்த 2 படங்கள்

கமலஹாசன் நடிப்புக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யக்கூடியவர். அவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கமலஹாசனை பொறாமைப்படும் அளவிற்கு அஜித்தின் நடிப்பு உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜயின் பல படங்களில் வெற்றி விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். இதனால் கமலுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் அஜித்தையும் கமலுக்கு மிகவும் பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கமலஹாசன், அஜித்தை பற்றி புகழ்ந்து பேசினார். அஜித்தின் நடிப்பை பார்த்து பொறாமைபடுவதாகவும், வாலி படத்தில் ஊமையாகவும், அமர்க்களம், படத்தில் திக்குவாயாகும் அஜித் நடித்து இருப்பதை பார்த்து நான் பிரமித்துப் போனேன் என கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நானும் ஊமையாகவும், திக்குவாய் கதாபாத்திரங்களிலும் நடித்து இருந்தேன், ஆனால் இவர் நடிப்பை பார்த்தும் பொறாமைப்படும் அளவிற்கு இருந்தது, அஜித் வேறு பாதையில் செல்லாமல் நடிப்பிலயே தொடர வேண்டும் என்பது என்னுடைய ஆசை என அந்த இசை வெளியீட்டு விழாவில் கமல் கூறியிருந்தார்.

அப்போது முன்னணி நடிகராக இருந்த கமல் தன்னை தாழ்த்திக் கொண்டு, வளர்ந்து வரும் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசியது பலரையும் வியக்கச் செய்தது. கமல் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களாக இருந்தாலும் சரி, மற்ற நடிகர்களாக இருந்தாலும் அவர்களின் திறமையை பாராட்டுவதில் கொஞ்சமும் தயங்க மாட்டார்.

Trending News