திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செல்லப்பிள்ளை மீது ஓவரா அன்பைப் பொழியும் கமலஹாசன்.. மணிரத்னம் வரை கூட்டிட்டு போன உலகநாயகன்

கமலஹாசன் ஒருவரை நம்பி விட்டார் என்றால் அவர் மீது கடைசிவரை நட்பு பாராட்டி விட்டுக் கொடுக்க மாட்டாராம். அப்படித்தான் இவர் இன்று வரை நாசர், சந்தான பாரதி, யுகி சேது போன்றவர்களுடன் நட்பு போற்றி வருகிறார். இப்பொழுது கமல் ஒரு நடிகர் மீது மிகுந்த அன்பு வைத்து வருகிறார் .

அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் கமலஹாசன் தற்சமயம் மணிரத்தினத்தின் தக்லைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஓவர் டெடிகேஷன் உடன் நடித்து வருகிறாராம், படத்தின் காட்சிக்காக மூக்கை கூட உண்மையாக புண்ணாக்கி கொண்டாராம்.

இதனிடையே கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் சிம்புவை வைத்து எஸ்டிஆர் 48 படம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதிக பட்ஜெட் காரணமாக அந்த படம் தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டது. மாறாக சிம்புவே தனது புது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் மூலம் அதை தயாரிக்கப் போகிறார்.

மணிரத்னம் வரை கூட்டிட்டு போன உலகநாயகன்

இப்பொழுது கமல் மற்றும் சிம்பு இருவருக்கும் உள்ள அன்பு நாளுக்கு நாள் கூடி கொண்டே வருகிறது. எஸ் டி ஆர் 48 படத்திற்காக சிம்புவிற்கு கமல் செலவழித்த ஒன்றரை கோடி ரூபாயை கூட விட்டுக் கொடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல் சிம்புவுக்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஒரு ஜெர்க்கினை கமலே டிசைன் செய்து பரிசாக கொடுத்துள்ளார்.

சிம்புவை கமல் விட்டுக் கொடுக்காமல் மணிரத்தினம் படம் வரை கூட்டி சென்று தக்லைப்பில் நடிக்க செய்துள்ளார். சிம்பு நடிப்பதால் பல ஹீரோக்கள் பிடிக்காமல் அந்த படத்திலிருந்து விலகி விட்டனர் இருந்தாலும் கமலின் முரட்டுப் பிடியால் சிம்பு அந்த படத்தில் நடித்து வருகிறார்.

Trending News