வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமல் கடைசி வரை கிட்ட சேர்த்துக்காத 5 நடிகர்கள்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Kamal Haasan: உலகநாயகன் கமலஹாசனை பொறுத்த வரைக்கும் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முதல் ஆளாக நிற்பவர். அப்படிப்பட்ட கமல், தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களாக இருந்த இந்த ஐந்து பேருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. அந்த ஐந்து பேர் யார் என்று பார்க்கலாம், அவர் ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்ற காரணத்தை இந்த செய்தியின் முடிவில் பார்க்கலாம்.

ரகுவரன்: வில்லனாக நடித்து சூப்பர் ஸ்டாராக தமிழ் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தவர் தான் ரகுவரன். ரகுவரனுக்கு முதலில் நாயகன் படத்தில் நாசர் நடித்த கேரக்டருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரகுவரன் முதலில் சரியென சொல்லிவிட்டு, அதன் பின்னர் அந்த கேரக்டரில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என சொல்லி அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அதன் பின்னர் கமல் மற்றும் ரகுவரன் இருவரும் எந்த படங்களிலும் இணையவில்லை.

கலாபவன் மணி: கலாபவன் மணி மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தாலும் தமிழ் சினிமா அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. அவர் விக்ரமுடன் ஜெமினி, விஜய் உடன் புதிய கீதை, சிம்புவுடன் குத்து போன்ற நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு முன் ரஜினியின் ரோபோ படத்தில் கூட ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். நிறைய மலையாள நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்த கமல் கலாபவன் மணி உடன் இணையவில்லை.

Also Read:நடிப்பில் கமல் மிரட்டிய 5 கிளைமாக்ஸ் சீன்கள்.. கண் கலங்க வைத்த ‘அன்பே சிவம்’

வடிவேலு: கமல் மற்றும் வடிவேலு ஆரம்ப காலகட்டத்தில் சிங்காரவேலன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, வடிவேலுவின் நடிப்பு பிடித்து போய் தேவர் மகன் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். வடிவேலுவின் ஆரம்ப காலகட்ட சினிமாவில் தொடர்ந்து இரண்டு படங்களில் வாய்ப்பு கொடுத்த கமல், அவர் பெரிய காமெடி நடிகராக மாறிய பிறகு அவருடன் இணைந்து பணியாற்றவே இல்லை.

மணிவண்ணன்: நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கியவர் தான் மணிவண்ணன். கமல், மணிவண்ணனுக்கு அவ்வை சண்முகி படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பெண் வேடத்தில் இருக்கும் கமலை ஒரு தலையாக காதலிக்கும் முதலியார் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். எப்போதுமே தன்னுடைய ஒரு படத்தில் இணைந்த நல்ல நடிகர்களை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொள்ளும் கமல் அவ்வை சண்முகி பிறகு மணிவண்ணனுடன் இணையவில்லை.

ஜனகராஜ்: கமல் மற்றும் ரஜினி படங்களில் ஆரம்ப காலகட்டத்தில் நண்பன் கேரக்டரில் ஜனகராஜ் அதிகமாக நடித்திருக்கிறார். கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஜனகராஜ் ஏற்று நடித்த போலீஸ் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் கமல், ஜனகராஜுக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டார்.

இந்த ஐந்து திறமை மிக்க கலைஞர்களை கமல் ஒதுக்கியதன் காரணம் அவர்களுக்கு இருந்த மதுப்பழக்கம் தான். இவர்களுடைய மது குடிக்கும் பழக்கத்தினால் தன்னுடைய பெயர் கெட்டுவிடும், படப்பிடிப்பில் தொய்வு ஏற்பட்டு விடும் என்ற ஒரு சில காரணங்களால் தான் கமல் இவர்களுடன் படம் பண்ண யோசித்தார்.

Also Read:கமல் போட்ட விதை, மின்னல் வேகத்தில் வசூல் சாதனை.. மஞ்சுமல் பாய்ஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Trending News