Kamalhassan: ஒருமுறை வெற்றியை ருசித்து விட்டால் தொடர்ந்து அதை நோக்கி மட்டுமே நம் கவனம் போகும். அப்படித்தான் சினிமாவில் இருக்கும் சில முக்கியமான நடிகர்கள் தொடர் வெற்றியை கொடுத்து இப்பொழுது வரை ஜெயித்துக் கொண்டு வருகிறார்கள். இதில் முக்கியமான இடத்தில் கமல்ஹாசனும் இடம் பிடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 5 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
தனித்துவமான நடிப்பை கொட்டும் கமலஹாசன்
அதன் பின் ஹீரோ, வில்லன் என்று பல கேரக்டர்களை தனக்குத்தானே செதுக்கிக் கொண்டு ஒவ்வொரு படங்களிலும் முன்னேறிக்கொண்டே வந்தார். அதனால் தான் என்னமோ தற்போது வரை 230 படங்களுக்கும் மேல் நடித்து உலக நாயகனாக ஜொலிக்கிறார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் போடாத வேஷம் இல்ல நடிக்காத கேரக்டர்கள் இல்லை. எல்லாத்தையும் நின்னு பேச வைக்கும் அளவிற்கு சாதனை படங்களாக கொடுத்து இருக்கிறார்.
அப்படிப்பட்ட இவருடைய பயணம் சற்றும் துவண்டு போகாமல் இன்னும் வரை புதுப்புது கெட்டப்புகளை போட்டு இவருடைய நடிப்புக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்து கொண்டே இருக்கிறார். அதனால் தான் 70வயதிலும் மற்றவர்களை விட ஒரு படி மேலே இருக்க வேண்டும் என்பதற்காக பல சவாலான கேரக்டர்களை எடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் தாத்தாவாக 2 மற்றும் 3 படங்களிலும், மணிரத்தினம் இயக்கத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கேரக்டரிலும் புகுந்து விளையாடி வருகிறார். போதாதருக்கு வில்லனாகவும் நான் நடிப்பில் மிரட்டுவேன் என்று சொல்லும் அளவிற்கு பிரபாஸுக்கு வில்லனாக கல்கி 2898 படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தில் கமலை நடிக்க வைப்பதற்காக கல்கி படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவிஸ் கமலுக்கு கிட்டத்தட்ட 150 கோடி சம்பளத்தை வாரி கொடுத்து இருக்கிறார். அந்த அளவிற்கு கமலின் நடிப்பு மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
பிரமிக்க வைக்கும் கமலின் வித்தியாசமான கெட்டப்
இதையெல்லாம் தொடர்ந்து நேற்று கல்கி படத்தின் டிரைலர் பார்த்த பொழுது அதில் நடித்திருக்கும் அத்தனை ஆர்டிஸ்ட்களையும் ஓரங்கட்டி விட்டு கமல் வந்த அந்த ஒரு நொடியை பேச வைத்திருக்கிறது. இதுதான் இவருடைய தனித்துவமான சிறப்பு என்று சொல்லும் அளவிற்கு பிரமிக்க வைத்திருக்கிறது. அதில் பயப்படாதே இந்த புது பிரபஞ்சமே உனக்காகத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் வசனத்தின் மூலம் மிரட்டி இருக்கிறார்.
அந்த வகையில் படம் எப்படியும் கமலுக்காக ஹிட் அடித்து விடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் இதில் கமலுடைய கேரக்டரை பார்க்கும் பொழுது அனைவருக்கும் தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பாட்டி கேரக்டர் தான் ஞாபகப்படுத்துகிறது. அதனால் தற்போது இது தசாவதாரம் படத்தில் வந்த பாட்டி என்று கலாய்த்து வருகிறார்கள்.
ஆனால் இந்த கேளிக்கும் கிண்டலுக்கும் அஞ்சக்கூடியவரா உலகநாயகன், எல்லாத்துக்கும் பதில் சொல்ல வேண்டுமென்றால் அவருடைய நடிப்பை பார்த்த பின்பு வாயடைத்துப் போக வைக்கும் அளவிற்கு பிரமிப்பாக இருக்கும்.
3 படங்களை கையில் வைத்திருக்கும் கமல்
- Indian 2: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வரும் சேனாபதி
- ஒத்த நொடியில் அனைவரையும் தூக்கி சாப்பிட்ட உலக நாயகன்
- கமலிடம் மாட்டி முழிக்கும் மணிரத்தினம்