Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அமெரிக்கா சென்ற கமல்.. அடடா இதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா

அமெரிக்கா சென்ற கமல்.. அடடா இதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறதா

பொதுவாக ஒரு படம் முடிந்து விட்டால் நடிகர், நடிகைகள் அந்த வேலைப்பளுவில் இருந்து விடுபடுவதற்காக இன்பச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் படம் முடிந்தவுடன் வெளிநாடு செல்வது வழக்கம். சமீபத்தில் கூட […]

பொதுவாக ஒரு படம் முடிந்து விட்டால் நடிகர், நடிகைகள் அந்த வேலைப்பளுவில் இருந்து விடுபடுவதற்காக இன்பச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் படம் முடிந்தவுடன் வெளிநாடு செல்வது வழக்கம். சமீபத்தில் கூட விஜய் கேரளா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது விக்ரம் படம் முழுவதுமாக முடிந்து விட்டது. அதை வெற்றிகரமாக முடித்த சந்தோசத்தில் கமல் அமெரிக்கா சென்றுள்ளார். கமல் எந்த ஒரு மருத்துவத்திற்காகவோ, இல்லை சிகை அலங்காரத்திற்கு செல்லவில்லை. அவர் தன் மனச்சோர்வை தணிக்க சென்றிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கமல், எப்பொழுதும் சினிமாவில் புதுப்புது விஷயங்களை செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். தமிழ் சினிமாவுக்காக அவர் பல டெக்னாலஜிகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார். இவரால்தான் புது புது முயற்சிகளை தமிழ் சினிமா எடுத்து வருகிறது.

ஒவ்வொரு முறையும் கமல் அமெரிக்கா சென்று வரும் பொழுது ஏதாவது ஒரு புது விஷயங்களை தன்னுடன் கொண்டு வருவார். அப்படி இருக்கையில் இந்த முறையும் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வரும்பொழுது தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான ஒரு டெக்னாலஜி கற்றுக் கொண்டுதான் வருவார்.

மாறாக விக்ரம் படத்தில் கமல் ஹாலிவுட் தரத்திற்கு சண்டைக்காட்சிகளில் அசத்தியுள்ளார். இது எல்லாம் அவர் ஹாலிவுட்டில் இருந்து கத்துக் கொண்டு வந்ததுதான். இப்படி ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புது விஷயங்களை செய்து காட்டி விடுவார்.

விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், இந்த படத்தில் கமல் நடிப்பில் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார் என்று எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.