திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி. அதில் எம் ஜி ஆர் அரசியலுக்கு சென்ற பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். மேலும் சிவாஜி வயதான பிறகு தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கி விட்டார்.

இவர்களைத் தொடர்ந்து ரஜினி மற்றும் கமல் இருவரும் முக்கிய நடிகர்களாக பார்க்கப்படுகிறார்கள். இருவருமே வயதாகியும் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இப்போது கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளனர். ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : அஜித்தை மந்திரிச்சி விட்ட ரஜினி.. மீண்டும் நடக்கப்போகும் சந்திப்பு

அதேபோல் சமீபத்தில் மணிரத்னம் படத்தில் கமல் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் முக்கிய பிரபலம் ஒருவர் கமலின் படங்கள் தான் காலத்தால் அழியாமல் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இன்னும் 10 வருடங்களில் ரஜினியை மறந்து விடுவார்கள் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இயக்குனர் இமயம் பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு பல படங்களில் நடித்தவர் கவிதாலயா கிருஷ்ணன். இவர் சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

Also Read : வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி

சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் பேசுகையில் கமல் போல ஒரு நடிகன் எங்குமே இல்லை, உலகம் அழியும் வரை அவரின் படங்கள் மறையாது. மேலும் அவருடைய அன்பே சிவம், குணா போன்ற படங்கள் காலத்தால் அழியாதவை என்று கமலை பெருமிதமாக பேசி உள்ளார்.

இதோடு விடாமல் ரஜினியின் படங்கள் வெற்றி அடைந்தாலும் காலப்போக்கில் அந்த படங்களை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கவிதாலயா கிருஷ்ணனுக்கு எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read : வினோத் படத்தில் ஏற்பட்ட குழப்பம்.. கமல் செய்ததை மறந்து பெரிய மனிதராக நடந்து கொள்ளும் விஜய் சேதுபதி

Trending News