புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரத்தக்கறையுடன் இருக்கவே ஆசைப்படும் கமல்.. மொத்தமாக மாற்றி வைத்திருக்கும் லோகேஷ்

Actor Kamal: கமலுடைய படங்களை எடுத்துக் கொண்டால் எல்லாமே ஒரே ஸ்டைலாக இல்லாமல் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாகத் தான் இருக்கும். இந்நிலையில் விக்ரம் படத்திற்கு முன்னதாக கமல் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு இடையில் மிகப்பெரிய இடைவெளியும் விழுந்துவிட்டது.

இதையெல்லாம் மறக்கடிக்க வைக்கும் வகையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றியில் இருந்தே கமலின் போக்கு வேறு விதமாகத்தான் இருந்து வருகிறது. அதாவது கமல் நடிக்கும் படங்கள் எல்லாமே ரத்த களறியுடன் இருக்கத்தான் ஆசைப்படுகிறார்.

Also Read : அஞ்சில வளையாதது ஐம்பதுல வளைஞ்சிருமா.? சிம்புவால் தலையில் துண்டை போட்டு உட்கார்ந்திருக்கும் கமல்

சமீபத்தில் கூட அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத்துடன் கமல் கூட்டணி போடுவது உறுதியாக இருந்தது. இந்த படம் விவசாயம் சம்பந்தப்பட்ட கதையாக தான் எடுக்க இயக்குனர் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் கமல் தனக்கு ஏற்றார் போல் கதையில் பல மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறாராம்.

சமீபத்தில் கூட இது சம்பந்தமாக ஒரு டீசர் துப்பாக்கிச் சூடும் பயிற்சி வீடியோவாக வெளியாகி இருந்தது. ஆகையால் இந்த படத்தில் சண்டை, ரத்தமும் ஆகியவை இடம்பெறும் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து கேரளாவில் ஆர்டிஎக்ஸ் என்ற ரத்த சதையுமாக சுட்டு தள்ளும் படம் அங்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read : கமல், ஏஆர் ரகுமான் மாதிரி காலை வாரி விட தயாரான பாலிவுட்.. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் இயக்குனர்

இப்போது இந்த படத்தையும் உலகநாயகன் விட்டு வைக்கவில்லையாம். உடனடியாகவே அந்த படத்தின் ரைட்சையும் வாங்கி விட்டாராம். இப்போது அதில் யார் ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்பது தற்போது வரை உறுதி செய்யாமல் இருக்கிறார். இதுவும் ரத்த களறியுடன் கொடூரமான படமாகத்தான் இருக்கப் போகிறது.

இவ்வாறு லோகேஷின் படங்கள் அடுத்தடுத்து மிக மோசமான வன்முறை காட்சிகள் வந்தாலும் அதையும் ரசிகர்கள் கொண்டாடி வெற்றி பெறச் செய்து விடுகிறார்கள். இப்போது அதே போல் தான் ஜெயிலர் படத்திலும் வன்முறை காட்சி இடம் பெற்று இருந்தது. ஆகையால் கமலும் இதே பாணியை பின்பற்றி வருகிறார்.

Also Read : கமல் நண்பராக இருந்தும் ரஜினிக்கு பிடிக்காத லிப்லாக் சீன்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பயில்வான்

Trending News