செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித், விஜய்யுடன் பொங்கலுக்கு மோத தயாராகும் கமல்.. ரஜினிக்கு போட்டியாக விறுவிறுப்பாக தொடங்கிய படத்தின் வேலை.!

தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களின் போட்டி எப்போதுமே இருந்து வரும். அது ஆரோக்கியமாகவே இருக்கும் எடுத்துக்காட்டாக ரஜினி, கமல் பல வருடங்களாக போட்டிப்போட்டு பல படங்களை கொடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் இன்று வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதேபோல் இவர்களுக்கு அடுத்ததாக வந்த அஜித், விஜய் இருபது வருடங்களுக்கு மேல் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்கள்.

வரும் பொங்கல் அன்று வாரிசு, துணிவு படங்கள் மோதுகின்றன என அறிவிப்பு வந்ததிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டில் வேறு எந்த செய்திகளும் முக்கியமாக தெரியவில்லை இவர்கள் பற்றிய செய்திகள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு இவர்கள் முக்கியமானவர்களாக முக்கிய கதாநாயகர்கள் ஆகவும் இருந்து வருகிறார்கள்.

Also Read : தயாரித்த முதல் படத்திலேயே தோல்வி அடைந்த கமல்.. நஷ்டத்தை ஈடுக்கட்ட 5 வருட போராட்டம்.!

இவர்களைப் பார்த்து ரஜினி, கமலே பொறாமைப்படும் அளவிற்கு இவர்களை வளர்ச்சி இருந்து வருகிறது, போட்டியும் இருந்து வருகிறது. தற்போது வரும் பொங்கலுக்கு இவர்கள் இருவருடன் கமல் மோதப்போகிறார் என்ற அறிவிப்பு வந்துள்ளது. கமல் நடித்து மிக பெரிய வெற்றி பெற்ற விருமாண்டி திரைப்படம் 2004 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் அன்று வெளிவந்தது.

அதேபோல் அடுத்த வருடம் 2023 பொங்கலன்று இந்த படத்தை விஜய்க்கும், அஜித்திற்கும் போட்டியாக விடலாம் என கமல் யோசித்து உள்ளாராம். எதற்காக இந்த முடிவு என்று தெரியவில்லை ஆனால் விஜய்க்கும், அஜித்திற்குமே திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் இருந்து வருகிறது இதில் எங்கிருந்து இவருக்கு திரையரங்கு கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.

Also Read : வலிமையில் வாங்கிய அடியே போதும்.. தயாரிப்பாளரை அடக்க அஜித் போட்ட டீல்

விஜய், அஜித் இவருடன் மோதுவதற்கு உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலே ஆசைப்படுகிறார்கள் ஆனால் படங்கள் இல்லாமல் தான் நடித்து வெற்றி பெற்ற படத்தை ரீ ரிலீஸ் செய்தது போட்டிபோட ஆசைப்படுகிறார்கள். ஏற்கனவே ரஜினி நடித்த பாபா ரிலீஸ் செய்து ரஜினி அசிங்கப்பட்டு இருக்கிறார். அதுவும் கமல் இந்த பெரிய படங்களுடன் தனது படத்தையும் வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது.

ஏற்கனவே கமல் நடித்த ஆளவந்தான் திரைப்படம் டிஜிட்டல் முறையில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. அதற்குள் இந்த விருமாண்டி படத்தை வேகவேகமாக வரும் பொங்கல் அன்று வெளியிடுவது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. அப்படி என்ன அவசியம் வேண்டி இருக்கிறது இந்த படத்தை வெளியிட அதுவும் இந்த பொங்கலுக்கு என்று பலர் கேட்டு வருகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது அடுத்து வரும் நாட்களில் இதற்கான பதில் கூடிய விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.

Also Read : விஜய்க்கு விரித்த வலையில் சிக்கிய சூப்பர் ஸ்டார்.. மெகா கூட்டணியில் இணைந்த இளம் இயக்குனர்

Trending News