வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரத்தம் வராமல் வார்த்தைகளால் அடிக்க போகும் கமல்.. ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களைக் கடந்த நிலையில் இப்போது தான் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆனால் போட்டியாளர்களின் உண்மை முகம் இன்னும் வெளிவராமல் வார இறுதியில் கமல் என்ன சொல்வார் என்ற யோசனையிலேயே உள்ளனர்.

கடந்த வாரம் தேவையில்லாத சண்டை பல அரங்கேறியது. ராஜா, ராணியாக இருக்கும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்ஷிதா தங்களது பொறுப்பில் ஒழுங்காக செயல்படவில்லை. அதுமட்டுமின்றி அசீம் மற்றும் ஏடிகே இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றது.

Also Read : பெண்கள் முன் ஹீரோயிசம் காட்டும் அசீம்.. குறும்படம் போட்டு கரியை பூச போகும் ஆண்டவர்

இப்போது கமல் பிக் பாஸ் போட்டியாளர்களை ரத்தம் வராமல் வார்த்தைகளாலே அடிக்க உள்ளார். அதாவது நாட்டிலும் உப்பால் தான் பிரச்சனை, வீட்டிலும் உப்பால் தான் பிரச்சனை என்று இன்றைய எபிசோடை கமல் தொடங்குகிறார். அதாவது இந்த விளையாட்டை சுவாரசியமாக்குவதற்காக சிவின் ராணி சாப்பாட்டில் உப்பை கலக்கினார்.

இதனால் பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறியது. அதில் தொடங்கிய பிரச்சினை தான் இன்னும் ஓயாமல் ஒவ்வொன்றாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கமல் என்ன பேசுவார் என்ற யூகிக்க தெரிந்த போட்டியாளர்களுக்கு, தான் என்ன பேச வேண்டும் என்று யூகிக்க தெரியவில்லை என்று ஆண்டவர் விளாச உள்ளார்.

Also Read : ரட்சிதா காதலை பிரிக்க மனமில்லாத பிக் பாஸ்.. இந்த வாரம் வெளியேற போகும் டம்மி போட்டியாளர்

மேலும் கடந்த வாரங்களில் மந்தமாக இருந்த கதிரவன் இந்த வாரம் சிறப்பாக விளையாடினார். அதே போல் சிவினும் விளையாட்டை விறுவிறுப்பாக்குவதற்காக பிக் பாஸ் சொல்லாத சில வேலைகளையும் செய்துள்ளார். ஆகையால் இவர்கள் இருவரையும் கமல் இன்று பாராட்ட உள்ளார்.

மேலும் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரக்ஷிதா காதல் விளையாட்டுக்கு இன்றாவது கமல் முற்றுப்புள்ளி வைக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதுமட்டுமின்றி நாளை பிக் பாஸ் வீட்டில் குறைந்த வாக்குகள் பெற்ற நிவாஷினி வெளியேறப் போகிறார்.

Also Read : டிஆர்பிக்காக தரமான ஆளை இறக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 6 வையல் கார்ட் என்ட்ரி

Trending News