35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த கமல்.. ஹீரோவையே மாற்றிய வினோத்

Actor Kamal: கமல் இப்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக முன்னணி இயக்குனர்களை தற்போது செலக்ட் செய்து வைத்துள்ளார். அதன்படி மணிரத்தினம், கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாகுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் லோகேஷும் கமலின் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த சூழலில் சமீபத்தில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. பொதுவாக வினோதின் படம் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். இந்நிலையில் கமலை வைத்து இவர் எந்த மாதிரியான கதையை இயக்குகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

மேலும் இப்போது வினோத் தனது படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். ஆனால் கமல் இப்படத்திற்கு வெறும் 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஒரு கதாநாயகனை வைத்து இவ்வளவு குறைந்த நேரத்தில் படத்தை எடுப்பது கடினமான விஷயம்.

இதனால் ஹீரோவையே மாற்றி உள்ளார் வினோத். அதாவது இந்த படத்தில் கமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி தான். ஆனால் கதாநாயகனாக விஜய் சேதுபதியை வைத்து எடுக்க இருக்கிறாராம். ஏற்கனவே வினோத், விஜய் சேதுபதி கூட்டணியில் ஒரு படம் உருவாக இருந்தது.

ஆகையால் விஜய் சேதுபதியின் கால்ஷூட்டை வைத்து இந்த படத்தை எடுக்க இருக்கிறார். கமலுடன் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற கனவை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றி இருந்தார். இப்போது மீண்டும் இதே கூட்டணியில் வினோத் இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது.

எனவே விஜய் சேதுபதியை தாண்டி கமலின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதற்கான பின்னணி வேலைகளை விரைவில் வினோத் தொடங்க இருக்கிறார். அதுமட்டுமின்றி விக்ரம் கூட்டணி மீண்டும் இணைய உள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →