புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆடியோ லான்ச்சே இவ்வளவு பிரம்மாண்டமா.. விக்ரம் படத்திற்கு 3 பெரிய இடங்களை குறிவைக்கும் கமல்

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்திற்கான விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் 36 வருடமாக கருதப்படுகிற விக்ரம் படத்திற்கு ஆடியோ லான்ச் மிக பிரம்மாண்டமாக வைக்க வேண்டும் என்று படக்குழு திட்டம் போட்டு வருகின்றன. ஆகையால் வருகிற மே 15-ஆம் தேதி பிரமாண்டமாக ஆடியோ லான்ச் வைக்கலாம் என்று கமல் மற்றும் படக்குழு முடிவெடுத்துள்ளனர்.

நீண்ட காலத்திற்கு அப்புறம் கமல் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பிரம்மாண்ட படம் இது. கமல் இந்த படத்தில் 1986 ஆம் ஆண்டு இவருடைய நடிப்பில் ஏற்கனவே வெளியான பழைய விக்ரம் படத்தின் கெட்டப்பில் 15 நிமிடங்கள் நடிக்கிறார். இதுவே ரசிகர்களுக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழாவை பிரம்மாண்டமான நடத்த ஏற்பாடு செய்து அதற்காக மூன்று பெரிய இடங்களை குறி வைத்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் பிரமாண்ட ஆடியோ லான்ச் நடைபெற வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் பெரிய பெரிய நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் படங்களில் ஆடியோ லான்ச் இங்குதான் நடைபெறும். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ஆடியோ மற்றும் இங்குதான் நடந்தது.

அடுத்ததாக இரண்டாவது இடமாக விக்ரம் படக்குழுவினர் லீலா பேலஸில் ஆடியோ லான்ச் விழாவை நடத்த குறி வைத்திருக்கிறது. எனவே சென்னையில் இருக்கும் இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்கும் வகையில் இந்த இடத்தை தேர்வு செய்யலாம். மூன்றாவதாக மற்றொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல் தேர்வு செய்து, அங்கும் விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச் ஏற்பாடு செய்யப்படலாம்.

இப்படி மூன்று இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் வருகிற மே 15ஆம் தேதி விக்ரம் படத்திற்கான ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதால், அதற்காக உலக நாயகன் கமலஹாசனின் ரசிகர்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர்.

Trending News