திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

Actor Kamal: பாகுபலி வெற்றிக்குப் பிறகு வேறொரு பரிமாணத்தில் களமிறங்கிய பிரபாஸின் படம் தான் ஆதிபுருஷ். இப்படத்திற்கு பிறகு இவரின் அடுத்த கட்ட படத்தில் இணைய போகும் கமலின் சம்பளம் குறித்து ஷாக் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த படம் தான் ஆதிபுருஷ். இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று படும் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து பிரபாஸின் அடுத்த கட்ட படமான ப்ராஜெக்ட் கே உருவாக உள்ளது.

Also Read: தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கண்ணன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு பிடித்திருக்கும் ஏழரை

பான் இந்தியா படமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள். மேலும் இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் கமல் பிரபாஸுக்கு வில்லனாக இடம்பெறுவதாக பேச்சு அடிபட்டு வந்தது.

இது கமல் ரசிகர்களிடையே பல எதிர்ப்புகளையும் முன் வைத்தது. தமிழில் கமல் பிரபலங்களுக்கு வில்லனாக நடிக்காத பொருட்டு, இப்படத்தை ஏன் ஏற்க வேண்டும் எனவும் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 600 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்படும் ப்ராஜெக்ட் கே இன் பட்ஜெட் தொகை வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: முதல் படமே மரண ஹிட் கொடுத்த 5 நடிகைகள்.. அருவியாய் மிரள விட்ட அதிதி

இப்படத்தில் இளம் நடிகரான பிரபாஸிற்கு 150 கோடி ஆனால் கமலஹாசனுக்கு வெறும் 20 கோடியா என எதிர்ப்பை முன் வைக்கும் விதமாக அறிவிப்பு வந்துள்ளது. அதை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு 10 கோடியும், அமிதாப்பச்சன்- 10 கோடி, திஷா பதானி-10 கோடி. மேலும் இப்படத்தின் புரொடக்ஷன் காஸ்ட்-400 கோடி எனவும் அறிவிப்பு வெளிவந்தது.

ஆகையில் இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரம் ஏற்பது மட்டும் அல்லாது வெறும் 20 கோடி மற்றும் சம்பளத்தை பெறுவது பல குழப்பங்களை ஏற்படுத்தி திரை உலகத்தினரை ஷாக் செய்து வருகிறது. மேலும் நெகட்டிவ் ரோலுக்கு இச்சம்பளம் மிக மிகக் குறைவு என்பதால் கமல் ரசிகர்கள் இடையே பெரும் வேதனையை உண்டுபடுத்தி வருகிறது.

Also Read: குணசேகரனால் கதிகலங்கி போய் நிற்கும் ஆதிரை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல்

Trending News