திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

kamal: இன்று வருகிறது லிங்குசாமி, கமல் பஞ்சாயத்தின் தீர்ப்பு.. பிராதை கண்டுக்காமல் டபாய்க்கும் உலக நாயகன்

பெரிய படங்களில் ரிசல்ட்டை எப்படி சினிமா இண்டஸ்ட்ரி கவனிக்கிறதோ அதேபோல் பெரிய பெரிய பஞ்சாயத்துகளின் ரிசல்டையும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும். என்ன தீர்ப்பு வருகிறது, யார் மேல் நியாயம் இருக்கிறது என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

இன்று கமல் மற்றும் லிங்குசாமி ஐந்து வருட பஞ்சாயத்துக்கு கவுன்சில் தீர்ப்பு வழங்க இருக்கிறது. லிங்குசாமி தரப்பில் கமல் மீது ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதாவது உத்தம வில்லன் படத்தில் கமல் நடித்தார் அந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரித்தது.

பிராதை கண்டுக்காமல் டபாய்க்கும் கமல்

திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரிப்பு நிறுவனம். உத்தம வில்லன் படத்தால் அந்த நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம். அதனால் கமல் இன்னொரு படத்திற்கு கால் சீட் கொடுப்பதாக லிங்குசாமிக்கு கூறியிருக்கிறார். ஆனால் இன்று வரை அந்த கால் சீட் கிடைக்கவில்லை.

லிங்குசாமிக்கு கமல் படம் பண்ணி தருவதாகவும், அந்த படத்தை 30 கோடிக்குள் பண்ண வேண்டும் என்பதுதான் அக்ரீமெண்ட். ஆனால் இன்று கமல் சம்பளமே 100 கோடிக்கு மேலாகிவிட்டது. இதனால் இந்த பஞ்சாயத்து இன்னும் முடிந்த பாடு இல்லை.

கமல் தக் லைஃப் படத்தில் பிஸியாக இருக்கிறார். கமலின் அண்ணன் சந்திரகாசன் இருக்கும் வரை அவரின் பஞ்சாயத்துகளை எல்லாம் பார்த்து வந்தார். இப்பொழுது அவரும் இல்லை. கமலின் வலதுகரமாக செயல்படும் மகேந்திரன் இதை கவனிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வருடங்களாக இந்த பிரச்சனை இழுத்துக் கொண்டே இருக்கிறது. இன்று முடிவு வரும் என மொத்த கோடம்பாக்கமும் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது

Trending News