புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அம்மாவின் இறுதி சடங்கில் கொந்தளித்த கமல்.. நட்பை விட்டுக் கொடுக்காமல் செய்த தரமான சம்பவம்

என்னதான் கமல் உலக நாயகனாக புகழின் உச்சியில் இருந்தாலும் பழசை ஒருபோதும் அவர் மறப்பது கிடையாது. அது மட்டுமல்லாமல் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர். அந்த வகையில் திரையுலகில் அவருக்கு சூப்பர் ஸ்டார் உட்பட பல நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு நண்பருக்காக கமல் செய்த மாபெரும் புரட்சி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது கமல் ரொம்பவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அவர் பம்பரமாக சுழன்று நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரால் தன் அம்மாவுடன் அதிகபட்ச நேரத்தை செலவிட முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவர் உடல் நலக்குறைவால் படுக்கையில் இருந்த போது கூட கமலால் அவரின் அருகில் இருக்க முடியவில்லை.

Also read: சூப்பர் ஸ்டாருக்காக குருவை டீலில் விட்ட லோகேஷ்.. யுனிவர்சில் நடக்கும் அதிரடி திருப்பம்

இருந்தாலும் முடிந்தவரை அவர் தன் அம்மாவுக்காக நேரம் ஒதுக்கி ஆறுதலாக இருந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் கமலின் அம்மா மரணம் அடைந்திருக்கிறார். அப்போது இறுதி சடங்கில் கமலின் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் இயக்குனர் ஆர் சி சக்தியும் ஒருவர்.

இவர் கமல், ரஜினி உட்பட பலரை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் கமலின் நெருங்கிய நண்பரும் கூட. அந்த வகையில் இவர் கமல் அம்மாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது அவருடைய பூத உடலை சுமப்பதற்காக அனுமதி கேட்டிருக்கிறார். இப்பொழுது போன்று அந்த காலத்தில் எல்லாம் வண்டி வசதி கிடையாது.

Also read: ஜகா வாங்கும் கமல்.. பொன்னியின் செல்வனால் வேற டிராக்கில் பயணிக்க போகும் உலகநாயகன்

இறந்தவர்களின் உடலை நான்கு பேர் தோளில் சுமந்து கொண்டு தான் தகனம் செய்ய செல்வார்கள். அதனாலேயே ஆர் சி சக்தி தன்னை பிள்ளை போல் பாவித்த கமல் அம்மாவின் உடலை தூக்குவதற்கு முன் வந்திருக்கிறார். ஆனால் பிராமணர் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோபமடைந்த கமல் தன் அம்மாவின் உடலை சுமக்க வந்திருந்த பிராமணர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

அப்போதுதான் அவர்கள் அனைவரும் குடித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த கமல் அவர்களிடம் என் நண்பன் முட்டை கூட சாப்பிடாத சுத்த சைவம். ஆனால் நீங்கள் குடித்துவிட்டு வந்திருக்கிறீர்கள். என் நண்பரை பற்றி பேச உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று சண்டையிட்டு தன் அம்மாவின் உடலை தன் நண்பரை சுமக்க வைத்திருக்கிறார். இப்படி ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அந்த காலகட்டத்திலேயே கமல் நட்புக்காக மாபெரும் புரட்சி செய்திருப்பது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Also read: கமலுக்கு எதிராக ஹீரோயிசம் காட்டும் அசீம்.. பிக்பாஸ் டைட்டிலுக்கு வர போகும் ஆப்பு

Trending News