திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உதயநிதியுடன் ரகசிய கூட்டு வைக்கும் உலகநாயகன்.. நடிக்கும் முன்னரே கமல் காட்டும் வில்லத்தனம்

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படம் வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்காக பல வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கமல் தன்னுடைய அரசியல் பணிகளையும், சினிமா நிகழ்ச்சிகளையும் கூட பக்காவாக செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தும் உலக நாயகன் கமலஹாசனுக்கு பல வருடங்கள் கழித்து கிடைத்த பொருளாதார வெற்றி என்றால் அது விக்ரம் திரைப்படம் தான். இதன் மூலம் கமல் சினிமாவில் சம்பாதிக்கவும் அடுத்தடுத்த வழிகளை தயார் செய்ய ஆரம்பித்திருக்கிறார். பல வருடங்களாக தன்னுடைய படங்களை மட்டுமே தயாரித்து வந்த கமல், இப்போது சிம்புவை வைத்து படம் தயாரிக்கவும் இருக்கிறார்.

Also Read:தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணும் பிரபாஸ்.. இது தெரியாமல் வாண்டடா மாட்டிய உலக நாயகன்

தயாரிப்புகளிலும் கவனம் செலுத்தி வந்த கமலுக்கு தேடி வந்த வாய்ப்பாக தற்போது கையில் அடித்திருக்கும் ஜாக்பாட் தான் ப்ராஜெக்ட் கே திரைப்படம். தேசிய விருது பெற்ற மகாநடி திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், பாலிவுட் ஹீரோ அமிதாப்பச்சன் மற்றும் டோலிவுட் ஹீரோ பிரபாஸை வைத்து இயக்கும் இந்த படத்தில் கமலஹாசனை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இந்த படத்தில் கமலுக்கு சம்பளம் 150 கோடி பேசப்பட்டிருக்கிறது.

இந்த படங்கள் மட்டும் இல்லாமல் கமல் அடுத்தடுத்து இயக்குனர்கள் எச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்திலும் படம் நடிக்க இருக்கிறார். இதில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் முதலில் தொடங்கப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட நாயகன் திரைப்படத்திற்கு பிறகு 30 வருடங்கள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. இதனால் தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

Also Read:வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

படத்தின் மீதான ஹைப்பை புரிந்து கொண்ட உலகநாயகன் கமலஹாசன் உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு ரகசிய கூட்டையும் ஏற்படுத்தி இருக்கிறார். இதற்கு காரணம் இந்த படத்தை தயாரிக்க இருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான். மணிரத்னத்துடன் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நல்ல கூட்டணியும் கிடைத்தாகிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் உடன் வணிக ரீதியாகவும் பிளானை தீட்டி வைத்து விட்டார் கமல்.

விக்ரம் 2 திரைப்படத்திற்கு முன்பு வரை கமலின் அரசியல் நிலைப்பாடும் வேறு மாதிரியாக இருந்தது. அந்த படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க உதயநிதி ஸ்டாலின் பக்கம் சாய்ந்து விட்டார் கமல். இவை எல்லாவற்றிற்கும் காரணம் அந்த படம் பெற்ற வணிக ரீதியான வெற்றி தான். அதனால்தான் தன்னுடைய 234 வது திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே தன்னுடைய வில்லத்தனமான பிளாணையும் தீட்டி இருக்கிறார் உலக நாயகன்.

Also Read:தேவர்மகன் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. உதயநிதியின் அரசியலை பற்றி பேசிய வடிவேலு

Trending News