ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கமல் – மணிரத்னம் கூட்டணியில் அடுத்த பட அப்டேட்.. இந்த ஜெனரேசனுக்கு ஆண்டவரை யாருனு தெரியாது – VJS

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தின் புதிய அப்டேட் மற்றும் தற்போதைய கமல்ஹாசன் என்று கூறப்படுவதற்கு விஜய்சேதுபதி கூறிய பதிலையும் இதில் பார்க்கலாம். கமல் படங்களுக்கு காலம் கடந்தும் இன்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும், அவர் நடிப்பும், அவரது படங்களில் உள்ள தொழில்நுட்பங்களும் தான் காரணம். இந்த நிலையில், கமலின் ஒவ்வொரு படங்களும் எதாவது ஒரு விதத்தில் தனித்தன்மை உடையாதாக இருக்கும். எப்போதும் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாகச் சிந்திக்கும் குணமுடைய கமல்ஹாசன் இந்திய சினிமாவில் லெஜண்டாக கருதப்படுகிறார்.

ஹாலிவுட்டில் ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமானால் அதைக் கற்றுக் கொள்ள வெளிநாடு கிளம்பிவிடும் கமல்ஹாசன், இங்குள்ள எழுத்தாளர்கள் முதற்கொண்டு கலைஞர்கள் வரை தகுதியும் திறமையும் உடையோரை தன் படங்களில் பங்களிக்க வைத்தோ அல்லது அவர்களின் புகழையும் பெருமையையும் தன் படங்களில் குறிப்பிட்டோ பெருமை சேர்ப்பவராகவும் உள்ளார். தற்போது கூட அவர் அமெரிக்காவுக்குச் சென்று ஏஐ தொழில்நுட்பம் பற்றிக் கற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமல் நடித்துள்ள படம் தக் லைஃப். இப்படம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, பல நாடுகளிலும் ஷூட்டிங் நடத்தப்பட்டு, நிறைவடைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கமலின் மற்ற படங்களைப் போலவே இப்படமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் வெளிநாடு கிளம்பிச் செல்லும் முன்பாக தக்லைஃப் படத்தைப் பார்த்துள்ளார். இதைப்பார்த்து நன்றாக வந்துள்ளதாக தனது ஒப்பீனியனை மணிரத்னத்திடம் கூறியுள்ளார் கமல். இப்படம் அவர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்துள்ளதால் இதன் இரண்டாம் பாகத்திற்கு கமல் மற்றும் மணிரத்னம் இருவரும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளாரர்கள் என்று கூறப்படுகிறது.

முதல் பாகம் வெளியான பின் அடுத்த பாகம் பணிகள் தயாராகும் என்று தெரிகிறது. ஏற்கனவே தமிழ் சினிமாவில் 2 வது பாகத்திற்கு ராசியில்லை என்று ஒரு தகவல் இருக்கும் நிலையில் இதைப் பொய்யாக்கும் வகையில் தக்லைஃப் -2 படம் இருக்கும் என்று தெரிகிறது.

தற்போது வரை உலக நாயகன் பட்டத்திற்கு சினிமாவில் யாரும் போட்டியிட்டதில்லை. அதனால் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டு வருவதாக கமல் ரசிகர்கள் கூறுவது வழக்கம். இந்த நிலையில், விஜய் சேதுபதியை இந்த ஜெனரேசன் கமல்ஹாசன் என்று சிலர் கூறுவதாக பிரபல ஊடகவியலாளர் விஜய்சேதுபதியிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தார். அதற்கு விஜய் சேதுபதி, ‘அந்தப் பட்டத்திற்கு நான் பொருத்தமானவன் அல்ல என்று பதில் கூறினார். ஏனென்றால் கமல்ஹாசனிடம் கற்றுக் கொள்ள அத்தனை விசயங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

விஜய்சேதுபதி இந்தப் பதிலைக் கூறியவதற்கு பாராட்டுகள் எழுந்துள்ளது. அவர் இப்படி கூறினாலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8வது சீசனில் கடந்த 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் சமீபத்தில் அதில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக விஜய்சேதுபதி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த இடத்தை விஜய்சேதுபதி பிடித்துள்ளாரே என்று அவரது ரசிகர்கள் கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

மேலும், கமல் தயாரிப்பில் அமைச்சர் உதயநிதி ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகிவிட்டதால், உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி அப்படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், விஜய்ச்சேதுபதி தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் உறுதிப்படும் என தெரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News