ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் கமல்- மணிரத்தினம்.. அந்த படத்தின் காபி தான் Thug Life?.

Thug Life Movie: லோகேஷ் இயக்கிய விக்ரம் இன்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த கமலஹாசன், இப்போது மணிரத்தினத்துடன் 36 வருடத்திற்கு பிறகு ‘தக் லைப்’ படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படம் தான் இப்போது ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் கமலஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்ட படம் தான் மர்மயோகி. இந்த படத்தை தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருந்தது. இந்த படத்தில் கமலுடன் திரிஷா உட்பட ஐந்து கதாநாயகிகளை தேர்வு செய்தனர்.

சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் கமல் மற்றும் திரிஷாவுக்கான டெஸ்ட் சூட் எல்லாம் நடந்தது. ஆனால் இந்த படம் ஒரு சில பிரச்சினைகளால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இப்போது கமல் நடித்துக் கொண்டிருக்கும் தக் லைப் படம் தான் மர்மயோகி என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

Also read: ரஜினியவே யோசிச்ச சன் பிக்சர்ஸ்.. லோகேஷை சும்மாவா விடுவாங்க?.

தக் லைப் படத்திலும் திரிஷா இருக்கிறார். இவர் மட்டுமல்ல நயன்தாரா, விருமாண்டி படத்தில் கமலுடன் ஜோடி போட்ட அபிராமி உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட மர்மயோகி படத்தின் போட்டோ சூட்டில் கமலின் கெட்டப்பை பார்க்கும் போது தக் லைப் படத்தில் இருக்கும் கமலின் கெட்டப்புடன் ஒத்துப் போகிறது.

இப்போது மர்மயோகி படத்தின் காபி தான் தான் தக் லைப் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. 2024 பிப்ரவரில தக் லைப் படத்தின் சூட்டிங் துவங்கப்படுகிறது. ஆனால் அதற்குள்ளேயே இந்த படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டு படத்தின் டைட்டிலையும் அறிமுகப்படுத்தினார்கள்.

ஆனால் இந்த வீடியோவை பார்த்த பிறகு ரசிகர்கள் குழப்பி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை கமல் மற்றும் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் அதிகப்படுத்தி இருக்கின்றனர். தக் லைப் மர்மயோகி-யின் காப்பியா என்பதற்கு உலக நாயகன் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பெண்கள் மனதை உருக வைத்த கமலின் 5 படங்கள்.. மொத்த தியேட்டரையும் கண்ணீரில் மிதக்க செய்த உலக நாயகன்

Trending News