சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

குடும்பம் குட்டின்னு ஆயிடுச்சு நீ நடிச்சு கிழிச்சது போதும்.. கமல் படத்தோடு கேரியரை முடித்து கொள்ளும் நடிகை

Actor Kamal Haasan: சினிமாவை பொறுத்த வரைக்கும் பொதுவாக மார்க்கெட் இல்லாத நடிகைகள் கூட படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு ஒதுங்கிவிடலாம் என்று நினைப்பது கிடையாது. வந்தவரை லாபம் என கிடைக்கும் வாய்ப்புகளில் எந்த மாதிரியான கேரக்டர்களாக இருந்தாலும் நடித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நல்ல மார்க்கெட்டோடு இருக்கும் பிரபல நடிகை ஒருவர் சினிமாவை விட்டு ஒதுங்க முடிவு எடுத்திருக்கிறார்.

முன்பெல்லாம் நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு செட்டில் ஆகிவிடுவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். கல்யாணத்தை முடித்துவிட்டு ஒரே வாரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.

Also Read:நடிப்பில் கமலை மிரட்டிய 4 நடிகைகள்.. இது வாரித் தின்னுவிடும்ன்னு பாரதிராஜாவிடம் சர்டிபிகேட் கொடுத்த உலக நாயகன்

குறுகிய காலத்திலேயே அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை காஜல் அகர்வால் தான் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்க முடிவெடுத்து இருப்பது. காஜல் அகர்வால் நல்ல மார்க்கெட் இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இவருடைய கணவர் மிகப்பெரிய தொழில் அதிபர்.

திருமணத்திற்குப் பிறகு காஜல் புது படங்கள் எதிலும் கமிட்டாகவே இல்லை. ஏற்கனவே தான் ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் தான் நடித்தார். அப்படி அவர் திருமணத்திற்கு முன்பு கமிட் ஆன படம் தான் இந்தியன் 2. தற்போது அதில் மட்டும் நடித்துக் கொடுத்திருக்கிறார். புதிதாக யாராவது படத்திற்காக அணுகினால் காஜல் வேண்டாம் என்று சொல்லி விடுகிறாராம்.

Also Read:அபூர்வ சகோதரர்கள், பாலா பட நடிகர் அகால மரணம்.. யாரும் உதவாததால் ரோட்டில் இறந்து கிடந்த பரிதாபம்

நடிகர் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் காஜல் அகர்வாலிடம் கால்சீட்டுக்காக சென்று இருக்கிறார். அப்போது அவர் நான் இனிமேல் நடிக்கப் போவதாய் இல்லை சிறிது காலம் ஓய்வெடுக்க முடிவு எடுத்து இருக்கிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம். இதன் மூலம் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்குவது உறுதியாக இருக்கிறது.

காஜல் அகர்வாலின் இந்த முடிவுக்கு அவருடைய கணவர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. நல்ல மார்க்கெட் இருந்தும் திருமணத்திற்கு பின் இனி நடிக்க வேண்டாம், குழந்தையையும், குடும்பத்தையும் மட்டும் பார்த்தால் போதும் என அவருடைய கணவர் கிடுக்கு பிடி போட்டதே இந்த முடிவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

Also Read:பிக் பாஸ் சீசன் 7ல் கமல் வாங்கும் சம்பளம்.. காற்றுள்ள போதே கல்லாவை நிரப்பும் உலக நாயகன்

Trending News