வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வேட்டைக்கு தயாராகும் கமல்.. 16 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸாகும் படம்

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான நடிப்பை கொடுத்து மிரள வைக்கும் கமல் இப்போதும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். கடந்த வருடம் அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படமே அதற்கு உதாரணம். இவ்வாறு தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கி இருக்கும் ஆண்டவர் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கும் தயாராகி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க அவருடைய நடிப்பில் 16 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஒரு படம் தற்போது ரீ ரிலீசுக்கு ரெடியாகி இருக்கிறது. அண்மைக்காலமாகவே இதுபோன்ற ரீ ரிலீஸ் படங்கள் வெளிவருவது அதிகமாகிவிட்டது. அதிலும் டாப் ஹீரோக்களின் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படங்கள் மீண்டும் புதுப்பொலிவுடன் ரசிகர்களின் பார்வைக்கு வருவது வரவேற்கக் கூடிய விஷயமாகவும் உள்ளது.

Also read: சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்.. கமல் படத்திற்கு பின் வெற்றி இயக்குனருடன் கூட்டணி

இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு மீண்டும் ரிலீஸ் ஆக இருக்கிறது. டிசிபி ராகவன் என்னும் கேரக்டரில் நடித்திருந்த கமல் இப்படத்தின் மூலம் பலரையும் மிரட்டி இருப்பார். அதிலும் சைக்கோ கொலைகாரர்களை கண்டுபிடிக்கும் யுக்தி, மனைவியின் இழப்பு, ஜோதிகா உடனான காதல் என அவருடைய கேரக்டர் வெறித்தனமாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அந்த வகையில் கமல் எத்தனையோ கேரக்டர்களில் தன்னை நிரூபித்து இருந்தாலும் இந்த டிசிபி ராகவனை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்த இந்த படம் வசூலிலும் சக்கை போடு போட்டது.

Also read: சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

அதன்படி 24 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 50 கோடி வரை வசூலித்திருந்தது. இது கௌதம் மேனனுக்கும் பாராட்டுகளை பெற்று தந்தது. இவ்வாறு தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் பிரபலமாகி இருந்த இப்படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் தற்போது களமிறங்கியுள்ளது.

அதன்படி இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மெருகூட்டப்படும் இப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட இருக்கிறது. இதனால் உற்சாகத்தில் இருக்கும் கமல் ரசிகர்கள் இதை கொண்டாடவும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும் டிசிபி ராகவன் மீண்டும் ஒரு வேட்டைக்கு தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

Trending News