ராஜ்கமல் நிறுவனத்தின் தொடர் தோல்விகளுக்கு பின்னர் விக்ரம் படத்தின் மூலம் பல நடிகர்களின் துணையோடு லாபம் கிடைத்தது. அதை வைத்து நல்ல படம் எடுக்கலாம் என்று நினைத்தார் கமல். ஆனால் கிடைக்கிறது தான் கிடைக்கும், நடக்கிறது தான் நடக்கும் என்று ஓடுகிறது கமலின் ராஜ் கமல் நிறுவனம்.
இயக்குனர் மணிரத்தினம் கூட சேர்ந்து கமலின் ராஜ் கமல் நிறுவனம் தக் லைப் என்ற படத்தை தொடங்கினார்கள். ஆனால் எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ அந்த படத்தில் நடிக்க வரும் நடிகர்கள், வருவதும் போவதுமாய் இருக்கிறார்களே தவிர ஒருத்தரும் நிரந்தரமாக இல்லை.
தற்பொழுது வரை ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நயன்தாரா எனப் பெரிய லிஸ்ட் போட்டார்கள். ஆனால் இவர்கள் யாரும் உறுதியாக நடிப்பார்களா என்பது தெரியவில்லை.
தற்போது உள்ள நிலவரப்படி துல்கர் சல்மான் கிளம்பிவிட்டார். அவருக்கு பதிலாக சிக்கியது நமது சிம்பு தான். வேலியில் போற ஓணானை
எடுத்து வேட்டியில் விட்ட கதை தான் கமலின் ராஜ் கமல் நிறுவனத்துக்கு.
ஏற்கனவே அவரை வைத்து கமல் தயாரித்து வரும் எஸ் டி ஆர் 48 படம் இழுவையிலும் இழுவை பெரிய இழுவையாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கே இன்னும் விடை கிடைக்கவில்லை. அதற்குள் அவரை தக் லைப் படத்திற்கு புக் செய்து விட்டார் கமல்.
கமல் சிவகார்த்திகேயன் கூட்டணியில் அமரன்
தக் லைப், எஸ்டிஆர் 48 படங்கள் தான் காலை வாருகிறது என்று வேதனை பட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து கமல் தயாரிக்கும் அமரன் படம் அதற்கு மேல் காலை வாரிக் கொண்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று அமரன் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தற்பொழுது உள்ள நிலவரப்படி அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாதாம். இது மேலும் கமலுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அமரன் படம் மிலிட்டரி கதையாக உள்ளதால் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினைகள் வரலாம் என்று ஒருவரும் படத்தை வாங்க தயாராக இல்லை. விக்ரம் படத்தில் கிடைத்த லாபம் மொத்தமும் அம்பேல் ஆகி விடுமோ என்று பயப்படுகிறார் கமல்.
அடகுக்கு போன ராஜ்கமல் நிறுவனத்தை மீட்டு வந்ததற்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள் கமலஹாசன் விரும்பிகள்.